3 முறை வைகோ உயிரை காப்பாற்றினேன்… மகனுக்காக எனக்கு துரோகி பட்டம்… மல்லை சத்யா குற்றசாட்டு..!!

By Soundarya on ஆடி 11, 2025

Spread the love

அதிமுக முதன்மை பொதுச் செயலாளர் துரை வைகோவிற்கும் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிற்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பாக மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக பதவி ராஜினாமா செய்வதாக துரை வைகோ அறிவித்தார். வைகோ உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் இருவரையும் சமாதானம் செய்த பிறகு துரை வைகோ தன்னுடைய முடிவை வாபஸ் பெற்றார், இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மதிமுகவில் பலகாலம் எனக்கு துணையாக மல்லை  சத்யா இருந்தார். ஆனால் சமீபத்தில் அவருடைய நடவடிக்கைகள் சரியில்லை. கட்சியிலிருந்து வெளியேறிய நபர்களோடு தொடர்பில் இருக்கிறார்.

பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்து போல மல்லை சத்யா எனக்கு துரோகம் செய்துவிட்டார். கட்சியிலிருந்து யார் வெளியேற வேண்டும் என்றாலும் தாராளமாக வெளியேறி கொள்ளலாம். கட்சிக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று பேசினார். இந்த நிலையில் இதுகுறித்து பேசிய மல்லை சத்யா குடும்ப அரசியல் எதிர்த்து கட்சி தொடங்கி வைத்த  துரை வைகோவுக்கு கட்சி தலைமை வழங்குவதற்கு தயாராகிவிட்டார். இதுவரை அவருடைய உயிரை 3 முறை காப்பாற்றி இருக்கிறேன். இப்போது வைகோ தன்னுடைய மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் கொடுத்து கட்சியிலிருந்து வெளியேற்ற பார்க்கிறார்” என்று கூறியுள்ளார்.