“இதுவரை நான் பார்க்காத ஊர்” ஆனால் அந்த கிராம மக்கள் சொன்ன விஷயத்தால் ஷாக் ஆனேன்… தலைவாசல் விஜய் போட்ட பதிவு..!!

By Soundarya on ஆடி 11, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்தவர் தான் தலைவாசல் விஜய். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் சீரியல்களிலும் பல வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக 1992 ஆம் ஆண்டு வெளியான தலைவாசல் என்ற திரைப்படத்தின் மூலம் இவர் பிரபலமானதால் அந்த பெயரை தன்னுடைய பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொண்டார். இதனை தொடர்ந்து தலைவாசல் விஜய் தேவர் மகன், மகளிர் மட்டும், விஷ்ணு, கருவேலம் பூக்கள், காதல் கோட்டை, காதலுக்கு மரியாதை மற்றும் பிரியமானவளே உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படி தமிழ் சினிமாவில் பல திறமைகளுடன் கலக்கிய தலைவாசல் விஜய் தற்போதும் சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில்  இவர் பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “சேலத்திலிருந்து நாச்சியார்கோயிலுக்குப் பயணம் செய்யும் போது, ​​நான் இதற்கு முன்பு சென்றிராத ஒரு இடமான தலைவாசலை -தற்செயலாகக் கண்டேன். ஆர்வமாக, நான் ஒரு புகைப்படம் எடுக்க நின்றேன். திடீரென்று, மக்கள் கூடி, என் மகளின் திருமணத்தில் கலந்து கொண்டதாகக் கூறினர்! நான் அதிர்ச்சியடைந்தேன். நான் அவர்களை இதற்கு முன்பு சந்தித்ததில்லை.

   

அவர்கள், “நம்ம ஊரு கரர் நீங்க. உங்க பொண்ணு கல்யாணத்திற்கு வரமா இருப்போமா?” என்றார்கள்.  ஒரு கணம், தலைவாசல் விஜய் தான் காரணம் என்று நினைத்தேன், தலைவாசல் படத்திலிருந்து நான் பெற்ற பெயர் அது. ஆனால் அவர்களுக்கு, நான் அவர்களின் தலைவாசலில் இருந்துதான் வந்தேன். நான் இந்த இடத்தின் பெயரிடப்பட்ட ஒரு படத்தில் மட்டுமே நடித்திருக்கலாம், ஆனால் தலைவாசல் மக்கள் எனக்குக் காட்டிய அன்பும் மரியாதையும். உண்மையிலேயே என்னை மூழ்கடித்தது.  ஆம், இந்தியாவின் இதயம் கிராமங்களில் உள்ளது. என்று பதிவிட்டுள்ளார்.