மதுரை மாவட்டம் விராதனூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற ஆடு மாடுகள் மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். மேடை முன்பாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டின மாடுகள், ஆடுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆடு மாடுகளோடு தொடங்கிய இந்த மாநாட்டில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அப்போது மேடையில் பேசிய சீமான், “ஆடு மாடு மேய்ப்பதற்கு தடை போட்டால் மேச்சல் நிலங்கலை உருவாக்க வேண்டும்.
தரிசு நிலத்தை மேய்ச்சல் நிலம் என்று சொல்ல வேண்டும். ஆகஸ்ட் 3ஆம் தேதி நானே தடையை மீறி தேனி மேற்கு தொடர்ச்சி மலையில் மேய்ச்சலுக்கு செல்வேன். எங்கு தடை செய்தார்களோ எங்கு மேய்க்க சென்றவரை வன காவலர் தள்ளினாரோ அதே இடத்தில் மாட்டை ஓட்டி செல்வேன். பசுமாதா நாங்கள் கேட்கிறோம் என்று கூறி பேசிய சீமான், “எங்கள் மூத்திரத்தை குடித்துமா உங்களுக்கு அறிவு வரவில்லை? என நான் சொல்லவில்லை பசுமாதா தான் சொல்கிறது. ஆடு மாடுகளுக்கு ஓட்டுரிமை தாருங்கள் நாங்கள் நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கும் இதுதான் எங்களுடைய கோரிக்கை” என்று கூறியுள்ளார்
