தமிழ்நாடு , அதிக விளையாட்டுத் திறன் கொண்ட வீரர்களுக்காக சிறப்பு உதவி தொகை திட்டங்களின் விண்ணப்பங்கள் இணையதளத்தின் மூலம் வரவேற்கப்படுகிறது. இது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு உதவித்தொகை திட்டம் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவித்து விடும் மற்றும் வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டம் ஆகியவை விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பயன்பெறும் வகையில் செயல்பட்டுவருகிறது. மேலே குறிப்பிடப்பட்ட திட்டங்களில் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பயன்பெறும் வகையில் 08.08. 2025 காலை 10 மணி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் இதற்கான கடைசி தேதி 08.09.2025 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
இந்த திட்டத்தில் தகுதியான விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். வெற்றியாளர் மேம்பாட்டு திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் விளையாட்டு வீரர்கள் கடந்த இரண்டு வருடம் காலத்தில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பாக பங்கேற்ற வேண்டும். வெற்றியாளர் மேம்பாட்டு திட்டத்திற்கு விண்ணப்பவர்களின் வயது அறிவிப்பு தேதியின்படி 20 உட்பட்டவராக இருக்க வேண்டும்.
இதில் தேர்வு செய்யபடுபவர்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களின் தலைமையிலான தேர்வு குழுவின் இறுதி ஒப்புதலுக்கு பின்னர் விண்ணப்பதாரர்கள் விதிமுறைகளின் அடிப்படையில் இத்திட்டத்தில் இணைக்கப்படுவார். இத்திட்டத்தில் விதிகள் மற்றும் நிபந்தங்களுக்கு உட்பட்டு அதிகப்பட்சம் இரண்டு ஆண்டுகள் வரை இத்திட்டத்திற்கான உதவி தொகை வழங்கப்படும். மேலும் அனைத்து விவரங்களுக்கும் 9514000777 என்ற தொலைபேசி எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அழைப்பு மேற்கொள்ளலாம்.
