தென்னிந்திய சினிமாவில் நேஷனல் கிரஷ் ஆக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் சமீபத்தில் சல்மான் கான் உடன் இணைந்து நடித்த சிக்கந்தர் திரைப்படம் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைப் போலவே ரன்பீர் கபூருடன் இணைந்து அனிமல், அல்லு அர்ஜுன் உடன் இணைந்த புஷ்பா 2, விக்கி கவுசல் உடன் இணைந்து சமீபத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த சாவா உள்ளிட்ட திரைப்படங்களில் ராஷ்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக ராஷ்மிகா இருந்து வருகின்றார். சினிமாவில் காலூன்ற பல ஆண்டுகள் ஆனாலும் தற்போது தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
இந்நிலையில் நடிகை ராஷ்மிகா அளித்துள்ள பேட்டி ஒன்றில், “எங்கள எதிராக ட்ரோல் செய்ய பணம் செய்யப்படுகிறது. என்னை வளர விடாமல் தடுக்கிறார்கள். இது எனக்கு வருத்தமாக இருக்கிறது. என் மீது அன்பு காட்டாவிட்டாலும் பரவாயில்லை அமைதியா இருங்கள் அதுவே போதும்” என்று வேதனை தெரிவித்துள்ளார்.
