வெறும் ரூ.500 முதலீடு செய்தால் போதும்.. மாதம் தோறும் ரூ.3000 ஓய்வூதியம் வழங்கும் மத்திய அரசின் சூப்பரான திட்டம்.. நீங்களும் ஜாயின் பண்ணுங்க..!

By Nanthini on ஆனி 20, 2025

Spread the love

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர்கள் முதல் முதியோர்கள் வரை ஒவ்வொருவருக்கும் தனித்தனி சிறப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்பாட்டில் வைத்துள்ளது. இதனால் ஏராளமானோர் பயனடைந்து வருகிறார்கள். இப்படியான நிலையில் மத்திய அரசின் PM-SYM திட்டம் 15,000 ரூபாய்க்கு குறைவான வருமானம் பெறும் தொழிலாளர்களுக்கு 60 வயதுக்கு மேல் 3000 ரூபாய் மாத ஓய்வூதியம் வழங்குகின்றது.

தெரு வியாபாரிகள், ரிக்ஷா இழுப்பவர்கள், கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள். இதற்கு 18 முதல் 40 வயதுக்குள் உள்ள தொழிலாளர்கள் மாதம் 500 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் 60 வயதிற்கு மேல் நீங்கள் மூவாயிரம் ரூபாய் மாத ஓய்வுதியம் பெறலாம். வயதான காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் நிம்மதியான வாழ்வை வாழ வேண்டும் என்று விரும்பினால் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து பயன்பெறலாம். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://maandhan.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.