மக்களே உஷார்…. உங்க போனுக்கும் இந்த மெசேஜ் வருகிறதா?… அப்போ இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க…!

By Nanthini on கார்த்திகை 19, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக அரசு என்ன தான் எச்சரிக்கை விடுத்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது புதுவிதமான மோசடி நடைபெற்று வரும் நிலையில் sbi வங்கி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏமாற்ற மோசடியாளர்கள் பல்வேறு வழிகளை பயன்படுத்துகின்றனர்.

ஆதாரை அப்டேட் செய்யாவிட்டால் உங்களின் SBI YONO App பிளாக் செய்யப்படும் என்று பலருக்கும் வாட்ஸ்அப் மெசேஜ் வருகிறதாம். SBI வங்கியின் லோகோவை டிபியாக வைத்துக்கொண்டு APK பைல்களை அனுப்பி அப்டேட் செய்ய இதை கிளிக் செய்ய சொல்கிறார்கள். ஆனால் இது போலியான செய்தி என்றும் இதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் PIB Fact check எச்சரிக்கை விடுத்துள்ளது.