செவ்வாய் அக்டோபர் மாத இறுதியில் தான் தன்னுடைய சொந்த ராசியான விருச்சிக ராசிக்குள் நுழைந்ததால் மனிதனின் காரணியாக கருதப்படும் சந்திரன் நவம்பர் 20 நாளை விருச்சிக ராசியில் நுழைய உள்ளார். இதனால் விருச்சிக ராசியில் செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் மகாலட்சுமி ராஜ யோகத்தை உருவாக்க உள்ளது. இந்த மகாலட்சுமி ராஜ யோகம் குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தர போகிறது.
மகரம்:
வருமானத்தில் நல்ல உயர்வு காண்பீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். எதிர்பாராத நிதி ஆதாயங்களும் கிடைக்கும். திட்டங்கள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக முடிவடையும். வெளிநாட்டிலிருந்து நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல வெற்றி கிடைக்கும்.
கன்னி:
இந்த ராசிக்காரர்களுக்கு பல வழியில் நல்லது நடக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிப்பதோடு நிதி ஆதாயங்கள் கிடைக்கும். தைரியமும் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியை வழங்குவீர்கள். எதிரிகளை வெற்றிகரமாக வீழ்த்துவதற்கான நேரம்.
விருச்சிகம்:
இந்த ராசிக்காரர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். செல்வ செழிப்பு உண்டாகும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நிதிநிலைமை வலுவடையும். பணியாற்றும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வணிகர்கள் எதிர்பாராத அளவில் லாபம் பெறுவார்கள்.
