இளம் வயதிலேயே முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டு பலரும் அவதிப்படுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் ஏற்பட மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பல காரணங்கள் உள்ளன. இதை சரிசெய்ய பலரும் கடைகளில் கிடைக்கும் கண்டகண்ட கிரீம்களை வாங்கி தடவுகிறோம். இதனால் நம்முடைய முகத்திற்கு பல கெடுதல்கள் உள்ளது. ஆனால் இதைப் போக்க வீட்டிலுள்ள பொருட்களை வைத்தே சரி செய்யலாம்.
அதாவது இரவு நேரத்தில் கற்றாழை ஜெல்லைக் கொண்டு 5 நிமிடங்கள் மசாஜ் செய்யலாம். அத்துடன், வாழைப்பழம் அல்லது பப்பாளி சாற்றை முகத்தில் தடவலாம். மேலும், தேங்காய் எண்ணெயைத் தொடர்ந்து பயன்படுத்துவது சிறந்தது. இவற்றைச் செய்து, மன அழுத்தத்தைக் குறைப்பதும் இளமைப் பொலிவுக்கு அவசியம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
