இன்று முதல் அமல்.. திடீரென கட்டணத்தை உயர்த்திய SBI வங்கி… வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்..!

By Nanthini on ஆவணி 15, 2025

Spread the love

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ வங்கிக்கு கூடுதல் வாடிக்கையாளர்கள் உள்ள நிலையில் அவர்களுக்காக சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது வங்கி கணக்கில் இருந்து IMPS டிரான்ஸ்பர் முறையில் பணம் பரிமாற்றம் செய்வதற்கான கட்டணங்களை உயர்த்துவதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.

அதன்படி 25 ஆயிரம் ரூபாய் வரையான தொகைக்கு கட்டணம் கிடையாது. ஆனால் 25 ஆயிரம் ரூபாய் முதல் 1,00,000 ரூபாய் வரை – ரூ.2 + GST, ஒரு லட்சம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை ரூ.6 + GST, இரண்டு லட்சம் ரூபாய் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை ரூ.10 + GST கட்டணம் இருக்கும். இந்த புதிய கட்டண விகிதங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.