வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை தெற்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவுகின்றது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகின்றது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வருகின்ற ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையிலும் ஒரு வாரம் மலைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இரவு கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் அடுத்த ஆறு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
