ஒருவர் அதிமுகவில் இருந்து வெளியேறி திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வந்துள்ளது. இதைக் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பு குழு புகழேந்தி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். நான்தான் பொதுச் செயலாளர் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். இவர் ஒன்றும் பொதுச் செயலாளர் இல்லை என்று தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம் கூறுகிறது. தேர்தல் ஆணையத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் இந்த விவகாரம் பற்றி பேச்சுவார்த்தை போய்க் கொண்டு தான் இருக்கிறது. தம்பிதுரை பேச முயன்ற போது கையைத் தட்டி விட்டது, செல்லூர் ராஜீவை பின்னால் வரும் காரில் வருமாறு கூறியது இது போன்ற எல்லை மீறிய செயல்களில் ஈடுபட்டு வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது வரவேற்கக் கூடியது. அதிமுகவில் உரிய மரியாதை கொடுக்காத காரணத்தினாலே கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்து வருகிறார்கள். ஏன் மைத்ரேயன் கூட அதிமுகவில் இருந்து திமுகவில் சேர்ந்து விட்டாரே. அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா, மைத்ரேயன், கார்த்திக் தொண்டைமான் இவர்கள் மூவரும் திமுகவில் சேர்ந்து விட்டார்கள். எவ்வளவு நாட்கள் திமுகவில் காலத்தை தள்ளுகிறார்கள் என்று பார்க்கலாம். தம்பி துரையும் திமுகவுக்கு செல்வதற்கு வாய்ப்பு உள்ளது.
எனக்குத் தெரிந்து அதிமுகவில் இருக்கும் அனைவருமே திமுகவிற்கு தாவி விடுவார்கள் என்று நினைக்கிறேன். பாஜக ஆதரவு இல்லாமல் தவிக்கப் போகுது, கவுன்சிலர் பதவியை கூட ஜெயிக்க போவது இல்லை. எனக்கு தெரிஞ்சு அதிமுக 10 சதவீத ஓட்டு கூட வாங்காது . 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கும் தவெகாவுக்கும் தான் போட்டி. நாம் தமிழர் கட்சியின் மூன்றாவது இடத்திலும் அதிமுக நாலாவது இடத்திலையும் போய்விடும்.
அன்வர் ராஜா மற்றும் மைத்ரேயனுக்கு அதிமுக கட்சியில் மதிப்பு இல்லை, திமுகவளையாவது பதவி குடுப்பாங்கன்னு போயிருக்காங்க. ஒரு தேர்தல்லயாவது தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றதான் அதிமுகவை சேர்ந்தவர் என்று சொல்றதுக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு உரிமை இருக்கு. ஈரோட்டில் நடந்த இடைத்தேர்தல்ல அதிமுக தோல்வி அடைந்தது அதனாலதான் மற்றொரு இடைத்தேர்தலில் போட்டியிடாம பின்வாங்கி உள்ளது. 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி வரப்போற தேர்தல்ல போட்டியிட வேண்டும். பாஜகவால ஏற்பட்ட அவமானத்தை பத்தி மக்களிடம் எடுத்துச் சொல்லணும், அது மட்டும் இல்லாம எடப்பாடி பழனிச்சாமி ஒரு துரோகி என்று தெரிவிக்க வேண்டும்.
