உஷார்..! இந்த மோசடியில் சிக்கிடாதீங்க… ஒத்த Link கிளிக் செய்தால் மொத்த பணமும் காலி… SBI வங்கி எச்சரிக்கை..!!

By Soundarya on மார்கழி 19, 2025

Spread the love

சமீபகாலமாக வாடிக்கையாளர்களின் வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் சமூக வலைதளங்களுக்கு, “உங்கள் YONO SBI கணக்கில் Reward Points சேர்ந்துள்ளது, அதை உடனே பணமாக மாற்ற இங்கே கிளிக் செய்யவும்” என்பது போன்ற போலியான மெசேஜ்கள் வருகின்றன. அந்த லிங்க்கை கிளிக் செய்தால், உங்கள் வங்கித் தகவல்களைத் திருடி மோசடிக்காரர்கள் பணத்தை அபகரிக்க வாய்ப்புள்ளது.

இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத மெசேஜ்களில் உள்ள லிங்க்களை எக்காரணம் கொண்டும் கிளிக் செய்ய வேண்டாம். உங்களின் வங்கி ரகசியத் தகவல்களை (OTP, PIN) யாரிடமும் பகிர வேண்டாம். நீங்கள் இது போன்ற மோசடி வலையில் சிக்கினால் அல்லது சந்தேகத்திற்குரிய மெசேஜ்களைப் பெற்றால், உடனடியாகப்  சைபர் கிரைம் உதவி எண்: 1930 அல்லது அதிகாரப்பூர்வ இணையதளம்: cybercrime.gov.in இதில் புகார் அளிக்கலாம்.