பூரம் நட்சத்திரத்திற்கு செல்லும் கேது… இந்த ராசிக்காரர்கள் காட்டில் இனி பணமழை தான்… இதுல உங்க ராசி இருக்கா…?

By Nanthini on மார்கழி 19, 2025

Spread the love

நவகிரகங்களில் அமங்கல நாயகனாக விளங்கும் கேது எப்போதும் பின்னோக்கி நகர்ந்து கொண்டே இருப்பது தான் வழக்கம். இந்நிலையில் ஜனவரி மாதத்தில் கேது பூரம் நட்சத்திரத்திற்கு செல்ல உள்ளார். பூரம் நட்சத்திரத்திற்கு செல்லும் கேது பகவானால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் மட்டும் அதிர்ஷ்டத்தை பெறப்போகிறார்கள்.

ரிஷபம்:

   

இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். பணியாற்றுபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பரம்பரை சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். வீட்டு சூழல் இனிமையாக மாறும். புதிய தொழிலை தொடங்கினால் நல்ல பலன் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.

   

விருச்சிகம்:

 

தைரியமும் துணிச்சலும் இந்த ராசிக்காரர்களுக்கு அதிகரிக்கும். வேலைகளில் வெற்றி பெறுவார்கள். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். கூட்டுத் தொழிலில் லாபம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். இந்த காலகட்டத்தில் நிறைய பணத்தை சேமிக்க முடியும்.

சிம்மம்:

இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயத்தை பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சமூகத்தில் செல்வாக்கு உயரும். தலைமைத்துவ திறன்கள் மேம்படும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பணியாற்றும் இடத்தில் அடையாளத்தை உருவாக்குவீர்கள். நிதி நிலைமை வலுவடையும். செல்வாக்கு மிக்கவர்களின் தொடர்பு நிறைய கிடைக்கும். இந்த காலகட்டத்தில் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளும் உருவாகும்.