“ஆண்களின் தவறான எண்ணத்திற்கு காரணம் பெண்களே”… நீயா நானாவில் நடந்த காரசாரமான விவாதம்… இணையத்தை அலறவிடும் ப்ரோமோ…!

By Nanthini on மார்கழி 19, 2025

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாக கூடிய மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா. பல வருடங்களாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார். மற்ற நிகழ்ச்சிகளுடன் ஒப்பிடும்போது இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சியில் புதிதாக ஏதாவது ஒரு தலைப்பு கொண்டே விவாதம் நடைபெறும். இப்படியான நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

   

அதாவது இந்த வாரம் பெண்களுக்கு ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு பெண்களும் பொறுப்பேற்க வேண்டும், இதனை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடந்துள்ளது. தற்போது சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. பகல் நேரங்களில் கூட வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண்கள் மீண்டும் வீடு திரும்புவது என்பது சவாலாகவே உள்ளது.

   

 

அந்த அளவிற்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் பல அசம்பாவிதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. என் நிலையில் இந்த வாரத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்படுகின்றது. இதனை பெண்களை பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுபவர்கள் தன்னுடைய பக்கத்தில் உள்ள நியாயத்தை கூறியுள்ளனர். அதுவே இதனை எதிர்ப்பவர்கள் தங்களுடைய தரப்பில் உள்ள நியாயத்தையும் கூறிய நிலையில் அது தொடர்பான புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது.