“பிரதீப் என் குடும்பத்தை காப்பாத்து பிரதீப்”… பிரதீப்பிடம் கெஞ்சிய ஐஷுவின் அப்பா.. வைரலாகும் வாட்ஸ்அப் Chat உரையாடல்..

By Begam on கார்த்திகை 27, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது இன்றுடன் 58 நாட்களையும் நிறைவு செய்துள்ளது.  இந்நிகழ்ச்சியை விட்டு ரெட் கார்ட் கொடுத்து வெளிய அனுப்பப்பட்ட முக்கிய போட்டியாளர்களில் ஒருவர் தான் பிரதீப் .இவருக்கு ரெட் கார்ட் கொடுத்ததற்காக சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

   

இருப்பினும் தற்பொழுது இவர் அதனை ஏற்றுக் கொண்டு தனது அடுத்த கட்ட வேலையை நோக்கி நகர்ந்து விட்டார். டைட்டில் வென்றிருந்தால் கூட இவ்வளவு பிரபலமாக இருக்க மாட்டார். ஆனால் தற்பொழுது இவருக்கு என இணையதள பக்கத்தில் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்பொழுது பிரதீப் தன்னுடன் Whatsapp chat செய்தவர்களின் Screenshot புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

   

 

பிரதீப் ரெட் கார்ட் கொடுத்து விவகாரத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்த அனைத்து போட்டியாளர்களும் ஒன்று சேர்ந்து தான் இந்த முடிவை எடுத்தனர். இது குறித்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ஐஷு முதலில் பதிவு வெளியிட்டு பிரதீப்பிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். பிக் பாஸ் வீட்டில் தவறான சேர்க்கையால் பல்வேறு தவறான செயல்களில் ஈடுபட்டு வந்திருந்தார் ஐஷு.

முக்கியமாக மாயா, பூர்ணிமா மற்றும் நிக்சன் இது குறித்து எல்லாம் அவர் வருந்தி மன்னிப்பு கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இதை தொடர்ந்து தற்பொழுது பிரதீப் நேற்று திடீரென ஐஷு அப்பா தன்னுடன் whatsapp-ல் தன்னிடம் மன்னிப்பு கேட்ட விஷயத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். ஆனால் அதை அவர் உடனே  delete செய்தும் விட்டார். தற்பொழுது இந்த Screenshot புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் Aishu அப்பா மிகவும் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டுள்ளார். இதோ பிரதீப் delete செய்த அந்த புகைப்படம்…