“தளபதி இல்லை.. தலைவலி.. நீ ஒரு கோழை”.. விஜய்யை வெளுத்து வாங்கிய சாட்டை துரைமுருகன்…. கொதிக்கும் தவெக….!

By Nanthini on பங்குனி 13, 2026

Spread the love

தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், தவெக தலைவர் விஜய்யை சாட்டை துரைமுருகன் கடுமையாக விமர்சித்துள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், தன்னை ‘தளபதி’ என்று அழைத்துக்கொள்ளும் விஜய், உண்மையில் தளபதி அல்ல, மாறாக ‘தலைவலி’ என்று விமர்சித்தார். சினிமாவில் வசனங்களை பேசி மக்களை ஏமாற்றும் விஜய், நிஜ வாழ்க்கையில் ஒரு கோழை என அவர் காட்டமாகக் குறிப்பிட்டார்.

முந்தைய சம்பவங்களை சுட்டிக்காட்டிய துரைமுருகன், மக்கள் துன்பத்தில் இருந்தபோது அவர்களைக் காக்காமல் ஓடியவர் எப்படி தலைவனாக முடியும் என்று கேள்வி எழுப்பினார். அதே சூழலில், சீமான் மற்றும் பிற அரசியல் கட்சித் தலைவர்கள் களத்தில் நின்றதையும் அவர் நினைவுகூர்ந்தார். வேலுநாச்சியார் அல்லது மருது பாண்டியர்கள் போன்ற வரலாற்றுத் தலைவர்களின் படையில் தளபதியாக இருந்தவரா இவர்? என்று சாடிய அவர், விஜய்யின் அரசியல் வருகையைத் தீவிரமாக எதிர்த்தார்.

   

விஜய்யின் திட்டங்கள் மற்றும் அரசியல் நகர்வுகளை விமர்சித்த அவர், சினிமாவில் நடித்துவிட்டு நேரடியாக ஆட்சிக்கு வர நினைப்பது தவறான முன்னுதாரணம் என்றார். இனி வரும் காலங்களில் சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வர நினைத்தால், இந்தத் தேர்தலின் முடிவுகள் அவர்களுக்குப் பாடமாக அமைய வேண்டும் என்று எச்சரித்தார். தான் விஜய்க்கு எதிரான அரசியலை முன்வைக்கவில்லை என்றும், உண்மைகளை மட்டுமே பேசுவதாகவும் அவர் தெரிவித்தார்.

   

சாட்டை துரைமுருகனின் இந்த அதிரடிப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே விஜய் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்படும் சூழலில், துரைமுருகனின் இந்தத் தாக்குதல் தமிழக அரசியலில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது. தவெக தரப்பு இதற்கு எவ்வாறு பதிலளிக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.