திரையுலகில் இயக்குனராகவும் நடிகராகவும் பிரபலமானவர் தான் சசிகுமார். 2008 ஆம் ஆண்டு வெளியான சுப்பிரமணியபுரம் திரைப்படத்தின் மூலமாக திரை உலகில் அறிமுகமானவர் அதன் பிறகு பல படங்களில் நடித்தும் பல படங்களை இயக்கியுமுள்ளார்.
இவரது நடிப்பில் நாடோடிகள், சுந்தர பாண்டியன், குட்டி புலி, வெற்றிவேல், அயோத்தி உள்ளிட்ட படங்கள் குறிப்பிடத்தக்கவை. தான் இயக்கிய படங்களுக்காக சசிகுமார் அவர்கள் தேசிய விருது மாநில விருது பிலிம் பேர் விருது என பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.
அதோடு தான் நடித்து பெயர் பெற்ற முதல் படமான சுப்பிரமணியபுரத்தை இயக்கியது மட்டுமில்லாமல் தயாரித்ததும் சசிகுமார் தான். ஆனால் சிலர் அவரிடம் படங்களை தயாரிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறியுள்ளனராம். சசிகுமார் பேட்டி ஒன்றில் இது குறித்து பகிர்ந்துள்ளார்.
அதாவது பிரபல நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூர்யாவின் தந்தையும் நடிகருமான சிவகுமாரும் தன்னை நடிப்பதற்கும் படங்களை இயக்குவதற்கும் அறிவுறுத்தியதோடு தயாரிப்பாளராக களத்தில் இறங்க வேண்டாம் என்று அறிவுரை கூறியதாக பகிர்ந்துள்ளார்.