அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைத்து அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தியுள்ளார். பழனியில் கட்சி நிர்வாகிகளான சி.வி. சண்முகம், நத்தம் விஸ்வநாதன் மற்றும் கே.பி. அன்பழகன் ஆகியோருடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இதுகுறித்து முடிவெடுக்க அதிமுக பொதுக்குழுவைக் கூட்டி விரிவாக ஆலோசிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், எடப்பாடி பழனிசாமி அறிவித்த புதிய கட்சிப் பொறுப்புகளைத் ஏற்க மறுத்த அவர், தங்களுக்குப் பொறுப்புகளை விட நிர்வாகிகளிடையே நிலவும் ஒற்றுமையே முதன்மையானது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
