மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) 3 சதவீதம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண் (CPI-IW) தரவுகளின் அடிப்படையில், கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் கணக்கிட்டு இந்த உயர்வு வழங்கப்படக்கூடும்.
இதன் மூலம், தற்போது 60 சதவீதமாக இருக்கும் அகவிலைப்படி 63 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சரவையின் அதிகாரப்பூர்வ ஒப்புதலுக்குப் பிறகு நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்த முடிவின் மூலம் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நிதிப் பலன்களைப் பெறுவர்.
