பருத்திவீரன் திரைப்படத்தில் சித்தப்பு என்ற கதாபாத்திரத்தில் சரவணன் என்கின்ற நடிகர் நடித்திருப்பார். ஆனால் முதலில் நடிக்க இருந்த நடிகர் அவர் இல்லையாம். இது குறித்து தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அதில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாகின்றது. ஒரு சில திரைப்படங்கள் வெளியாகி பல வருடங்கள் ஆனாலும் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமாக இருக்கும். அப்படி திரையில் வெளியாகி 17 ஆண்டுகளான பின்னரும் மக்களால் அதிகளவு பேசப்படும் திரைப்படம் தான் பருத்திவீரன்.

துணை இயக்குனராக இருந்த அமீர் இயக்குனராக களம் இறங்கிய முதல் திரைப்படம் பருத்திவீரன். அது மட்டும் இல்லாமல் இப்படத்தில் நடித்திருந்த பல நடிகர்கள் அறிமுக நடிகர்கள் தான். சூர்யாவின் தம்பி என்று அடையாளத்துடன் நடிகர் கார்த்திக் அறிமுகமான முதல் திரைப்படம் மற்றும் நடிகை ப்ரியாமணி தமிழில் அறிமுகமான முதல் திரைப்படமும் இதுதான். முத்தழகு கதாபாத்திரமாக வாழ்ந்த நடிகை பிரியாமணிக்கு இந்த திரைப்படத்திற்காக தேசிய விருது கிடைத்தது.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. இந்த திரைப்படங்கள் வெளியாகி பல வருடங்கள் ஆனாலும் அடிக்கடி இப்படத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் மற்றொரு காரணம் இப்படத்தை விடாமல் துரத்தும் தயாரிப்பு பிரச்சினை தான். இருதரப்பும் மாறி மாறி அறிக்கை விட்டு ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இதில் சம்பந்தப்பட்ட நடிகர் கார்த்தியும், சூர்யாவும் தொடர்ந்து மௌனம் சாதித்து வருகிறார்கள். குறிப்பாக ஞானவேல் ராஜா இயக்குனர் அமீரை திருடன் என விமர்சித்து இருந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதைத்தொடர்ந்து பல பிரபலங்கள் அவர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்க இந்த பிரச்சனை ஒரு வழியாக ஓய்ந்தது.
இந்த திரைப்படம் குறித்து ஒரு அரிய தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதாவது இப்படத்தில் சித்தப்பு என்கின்ற கதாபாத்திரத்தின் நடித்திருந்தது நடிகர் சரவணன். நடிகர் கார்த்திக்கின் சித்தப்பாவாக நடித்து மிகவும் அசத்தியிருப்பார். ஆனால் இந்த திரைப்படத்தின் கதையை எழுதும்போது இயக்குனர் அமீர் இந்த கதாபாத்திரத்தில் நடிகர் பசுபதியை நடிக்க வைக்க வேண்டும் என்று எண்ணி தான் எழுதினாராம்.

#image_title
இந்த படத்தின் கதையை அவரிடம் கூறிவிட்டு கால்ஷீட்டுக்கு வெயிட் பண்ணியபோது அவர் இப்படத்தில் நடிக்கவில்லை என்று கூறிவிட்டாராம். அந்த சமயத்தில்தான் நடிகர் சரவணன் அமீரிடம் வாய்ப்பு கேட்க செவ்வாழை கதாபாத்திரத்தை அவரை வைத்து எடுத்தாராம். இந்த கதாபாத்திரத்துக்கு மிகவும் பொருத்தமாக நடிகர் சரவணன் நடித்திருப்பார். ஒருவேளை பசுபதி நடித்திருந்தாலும் இவ்வளவு கச்சிதமாக பொறுத்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
