பிரபல நடிகரான அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக ஷூட்டிங் நடைபெறாமல் படம் கிடப்பில் போடப்பட்டது. வருகிற ஜூன் 20ஆம் தேதி அர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது. ஏற்கனவே பட குழுவினர் அர்பைஜானுக்கு புறப்பட்டு சென்றனர்.

விடாமுயற்சி படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங்கிற்கு 13 கோடி ரூபாய் பணம் தேவைப்படுவதாக தெரிகிறது. இதனை லைக்கா நிறுவனம் தான் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால் கடைசி நேரத்தில் நடிகர் அஜித்குமார் தனக்கு சேர வேண்டிய சம்பளம் பாக்கி கொடுத்தால் தான் ஷூட்டிங்கில் கலந்து கொள்வேன் என கூறுகிறார்.

இறுதி கட்ட படபிடிப்புக்கு 13 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்க நிலையில் அதனையும் தாண்டி அஜித்துக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது. இதுவரை அஜித்துக்கு பாதி சம்பளம் கூட வந்து சேரவில்லையாம். இதனால் ஷூட்டிங்கை முடித்துக் கொடுத்து விட்டால் தனது சம்பளம் பாக்கி கொடுக்காமல் போக வாய்ப்புள்ளது என நினைத்து அஜித்குமார் விடாப்படியாக பேசுகிறாராம்.
ஷூட்டிங்கை முடித்துக் கொடுத்துவிட்டு டப்பிங் பேசுவதற்கு முன்பாக முழு பணத்தையும் வாங்கலாமே? அஜித் ஏன் விடாப்படியாக நிற்கிறார்? அந்த படத்தை நடித்து கொடுத்தால் தான் அடுத்து குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடியும் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் விடாமுயற்சி படம் என்ன ஆகுமோ என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
