இந்த மூஞ்சிக்கு சிம்ரன் கேக்குதா..? கேலி கிண்டல் செய்த பணியாளர்கள்.. பின்பு சாதித்து காட்டிய சூர்யா..!

By Mahalakshmi on ஆனி 14, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் சூர்யா ஆரம்ப காலகட்டத்தில் ஏற்பட்ட பல இன்னல்கள் பற்றி தான் நாம் இதில் பார்க்க போகிறோம்.

தமிழ் சினிமாவில் தன்னுடைய கதாபாத்திரத்திற்காக உடலை வருத்தி நடிக்கும் நடிகர்கள் என்றால் மிகவும் குறைவானவர்கள் தான். அதில் முக்கியமாக கமல்ஹாசன், விக்ரம், சூர்யா போன்ற நடிகர்களை கூறலாம். அதிலும் நடிகர் சூர்யா பல திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருக்கின்றார். தனது படத்தில் வரும் கதாபாத்திரத்திற்காக தன்னை எப்படி வேண்டுமென்றாலும் மாற்றிக் கொள்ளக்கூடிய ஒரு நடிகர்.

   

   

பேரழகன் திரைப்படத்தில் கூனனாகவும், பிதாமகன் திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்திலும், ஏழாம் அறிவு திரைப்படத்தில் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து கஜினி திரைப்படத்தில் மொட்டை போட்டு நடித்திருப்பார். இப்படி தனது கேரக்டருக்காக மெனக்கெட்டு நடிக்கக்கூடிய நடிகர்களில் இவரும் ஒருவர்.

 

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து ஏகப்பட்ட ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் பலம்பெரும் நடிகராக இருந்தவர் தான் சிவக்குமார் அவரின் மகன் சூர்யா அவருக்கு சூர்யாவை சினிமாவிற்குள் அனுப்புவதற்கு பெரிய அளவு விருப்பமில்லை.

அதனால் ஒரு கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். சூர்யா இடையில் தான் சினிமா வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தது. அந்த நேரத்தில் தான் இவருக்கு நேருக்கு நேர் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் இந்த விஷயத்தை தனது சக நண்பர்களிடம் பணியாளர்களிடமும் சூர்யா பகிர்ந்து இருக்கின்றார்.

 

இதை கேட்ட நடிகர் சூர்யா உனக்கு சிம்ரன் ஜோடியா? என கிண்டல் செய்து இருக்கின்றார். அதன் பிறகு தான் நான் பிரபல நடிகர் சிவகுமாரின் மகன் என்பதே அவர் வெளியில் சொல்லி இருக்கின்றார். அதன் பிறகு கிண்டல் செய்தவர்கள் எல்லாம் நடிகர் சூர்யாவை ஆச்சரியமாக பார்க்க தொடங்கினார்கள். இப்படி தான் சூர்யாவுக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் அவர் பட்ட கஷ்டங்களும் பல..