தமிழக பாஜகவில் இணைந்த பிறகு தமக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படாதது குறித்து, “எனக்குத்தான் பாஜகவில் எந்தக் கட்சிப் பதவியும் இல்லையே” என்று நடிகர் சரத்குமார் அளித்த பேட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்துத் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரம் காட்டிய சரத்குமார் மற்றும் ராதிகா இருவருக்குமே இன்னும் பாஜகவில் அதிகாரப்பூர்வப் பொறுப்புகள் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, பதவி இருந்தால் மட்டுமே கருத்துச் சொல்ல முடியும் என்ற தொனியில் அவர் அளித்த பதில் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அதேவேளையில், தமிழக பாஜக தலைவர் பதவிக்குச் சரத்குமாரின் பெயர் பரிசீலிக்கப்பட்டு வருவதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் களம் சூடுபிடிக்கக் காரணமாக அமைந்துள்ளன.
