முன்னாள் அதிமுக நிர்வாகிகளுக்கு செக்…! இடைதேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை…? தவெக தலைமையின் திடீர் முடிவு…!!

By Devi Ramu on ஐப்பசி 20, 2026

Spread the love

அதிமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த தலைவர்களுக்கு வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிப்பதா வேண்டாமா என்பது குறித்து முதல்வர் விஜய் தீவிர யோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே தவெக சார்பில் மரகதம் குமாரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் இடைத்தேர்தலில் சீட் வழங்கப்பட்டதற்கு மக்களிடையேயும் தொண்டர்களிடையேயும் சில அதிருப்திகள் கிளம்பியதாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாக, கட்சிக்கு வந்துள்ள முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு நேரடியாகத் தேர்தல் களத்தில் சீட் வழங்குவதற்குப் பதிலாக, முக்கிய அரசு வாரியப் பதவிகள் வழங்கி கவுரவிக்கலாமா எனத் தவெக தலைமை ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

   

மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களுக்குத் தொடர்ந்து தேர்தல் வாய்ப்புகள் அளிக்கப்படுவது கட்சியின் ஆரம்பகாலத் தொண்டர்களின் வாய்ப்பைப் பறிப்பதாக அமையுமா அல்லது அனுபவமிக்கத் தலைவர்களைப் பயன்படுத்த வாரியப் பதவிகள் தருவது சரியான அணுகுமுறையா என்ற விவாதம் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.