வங்கதேசத்தில் காவல்துறையினர் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, பொதுமக்கள் மத்தியில் நபர் ஒருவர் கொடூரமான முறையில் அடித்துத் துவைக்கப்படும் பதைபதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. முதியவர் மீது நடத்தப்பட்ட இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல் நெட்டிசன்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது.
ஐநா மற்றும் மனித உரிமை அமைப்புகளை டேக் செய்து கேள்வி எழுப்பி வரும் பயனர்கள், இத்தகைய வன்முறைச் செயல்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும், பாதுகாப்பற்ற சூழல் குறித்துக் கடும் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
