திக்.. திக்..! இவளா ஒரு தாயா?… பயங்கர அலறல் சத்தம்… பூட்டிய கதவு… தாய் செய்த வெறிச்செயல்… நெஞ்சை உலுக்கும் கோர சம்பவம்…!!

By Gayathri on ஐப்பசி 20, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் கெர்லி பகுதிக்கு உட்பட்ட டான்டியா கிராமத்தில், 28 வயது தாய் ஒருவர் தனது மூன்று வயது பெண் குழந்தை மற்றும் நான்கு வயது ஆண் குழந்தையைக் கத்தரிக்கோலால் தாக்கிப் படுகொலை செய்துள்ளார். கொடூரமான இந்தத் தாக்குதலைத் தடுத்து நிறுத்தப் போராடிய அவரது சகோதரி படுகாயமடைந்து, தீவிர சிகிச்சைக்காக ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். தொடர்ந்து, அந்தப் பெண் தனக்குத்தானே பலத்த காயங்களை ஏற்படுத்திக்கொண்டு சம்பவ இடத்திலேயே உயிரை மாய்த்துக் கொண்டார்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல் துறையினரும் தடயவியல் பிரிவினரும் நிகழ்விடத்தில் தீவிர ஆய்வு மேற்கொண்டு தடயங்களைத் திரட்டியுள்ளனர். பெற்ற பிள்ளைகளையே பலிகொடுத்து தாயும் தற்கொலை செய்துகொண்ட இக்கோர நிகழ்வுக்கான உண்மையான பின்னணி இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம் இருந்து அதிகாரப்பூர்வ புகார் பெறப்பட்ட பின்னரே தீவிர விசாரணை தொடங்கி உண்மை வெளிவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.