கோடியில் சம்பளம் வாங்கிட்டு நடிக்க வராமல் இருப்பவர்களுக்கு ஏன் அட்வான்ஸ் கொடுக்கணும்..? என்னது பேசினாலும் இது இப்படித்தான் இருக்கும்.. ஓப்பனாக பேசிய சரத்குமார்..!!

By admin on ஆவணி 1, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் இயக்கிய நடித்த ராயன் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் ஒரு சில நடிகர் நடிகைகள் படத்தில் நடிக்க அட்வான்ஸ் தொகையை வாங்கிவிட்டு நடிக்காமல் இருக்கின்றனர். மேலும் புதிதாக வரும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்று விடுவதால் அட்வான்ஸ் கொடுத்த தயாரிப்பாளர்கள் பொருளாதார இழப்பை சந்திக்கும் சூழ்நிலை நிலவுகிறது.

   

எனவே தயாரிப்பாளரிடம் அட்வான்ஸ் வாங்கி இருந்தால் அந்த படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு தான் அடுத்த திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அந்த வகையில் நடிகர் தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளை துவங்குவதற்கு முன்பாகவே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினை கலந்தாலோசிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

   

 

ஆனால் தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் தனுஷ் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் இதுவரை எந்த புகார் அளிக்கவில்லை. அவர் மீது எந்த புகார் நிலுவையில் இல்லை. அப்படி இருக்க எங்களிடம் தயாரிப்பாளர் சங்கம் கலந்து ஆலோசிக்காமல் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது கண்டனத்திற்குரியது என்ற அறிக்கையை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பிரபல நடிகரான சரத்குமாரிடம் ஒரு யூட்யூப் பேட்டியில் பாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தனுஷ் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சரத்குமார் உட்கார்ந்து பேசுவதை தவிர வேறு எந்த முடிவும் எடுக்க முடியாது. இது இப்ப மட்டும் நடக்கல. நான் நடிச்ச காலத்துல இருந்து நடந்துகொண்டு தான் இருக்குது.

என்ன பொறுத்த வரைக்கும் எல்லாரும் பொறுமையா உட்கார்ந்து பேசி முடிவு எடுக்க முடியுமான்னு தெரியல. ஆனா இது பல தடவை பேசப்பட்ட ஒன்றுதான். வேலை நிறுத்தம் அப்படிங்கறது சரியில்ல. உட்கார்ந்து பேசணும். தயாரிப்பாளர்கள் அட்வான்ஸ் கொடுக்கும்போதே தனுஷிடம் கால்ஷீட் எழுதி வாங்கி இருந்தா இந்த பிரச்சனை வந்திருக்காது. ஹீரோ எப்போ வேண்டுமானாலும் டேட் கொடுத்தால் போதும் என அட்வான்ஸ் கொடுக்கிறார்கள். அப்புறம் அவங்க பிசியாகிட்டா பிரச்சனை பண்றாங்க. இதுதான் அன்னையிலிருந்து நடந்துட்டு வருது. என்ன பொறுத்த வரைக்கும் பணம் கொடுத்த தயாரிப்பாளரும், தனுஷும், தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கமும் உக்காந்து யோசிச்சு ஒரு சுமூகமான முடிவை எடுக்குறதுக்கு முன்வர வேண்டும் என கூறியுள்ளார்.