நடிகை ஸ்ரிதிகா கடந்த 2010-ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியலில் மலர் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த சீரியல் மூலம் ஸ்ரிதிகா மிகவும் பிரபலமானார். முன்னதாக மெட்டி ஒலி சீரியலில் நடித்தார். இதனையடுத்து மாமியார் தேவை, வைதேகி, உறவுகள் சங்கமம், கல்யாணப்பரிசு, மகராசி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் முகூர்த்தம், கலசம், கோகுலத்தில் சீதை, உயிர் உள்ளிட்ட சீரியல்களில் துணை கதாநாயகியாகவும் நடித்துள்ளார். வெண்ணிலா கபடி குழு, வேங்கை, பாலு தம்பி மனசிலே, மதுரை டு தேனி உள்ளிட்ட படங்களில் ஸ்ரிதிகா நடித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு சனீஸ் என்பவருடன் ஸ்ரிதிகாவுக்கு திருமணம் நடைபெற்றது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக ஸ்ரிதிகா தனது கணவரை விட்டு பிரிந்தார். இதனை அடுத்து சீரியலில் ஹீரோவாக நடித்த ஆர்யன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். இந்த நிலையில் ஸ்ரிதிகாவும் ஆரியனும் ஒரு பேட்டியில் கலந்து கொண்டனர். அப்போது ஆர்யன் கூடியதாவது, நானும் என் முதல் மனைவியும் லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.
நிறைய விஷயம் எனக்கும் அவங்களுக்கும் ஒத்துப் போகல. நாங்க சண்டை போட்டு பிரியல. ரெண்டு பேருக்கும் இது செட் ஆகலன்னு பேசி மியூச்சுவலா வெளியே வந்துட்டோம். என் ஃபேமிலியில் இருக்கிறவங்க ரொம்ப வருத்தப்பட்டாங்க. நானும் ஸ்ரிதிகாவும் பிரண்ட்ஸா இருக்கப்போ, இவங்க என்னையும் என் முதல் மனைவியையும் சேர்த்து வைக்கிறதுக்கு ட்ரை பண்ணாங்க. கல்யாணப்பரிசு சீரியல் நடக்கும் போது ஸ்ரிதிகா என்னோட முதல் மனைவியோட வொர்க் பண்ணிட்டு இருந்தாங்க. ரொம்ப அக்கறை எடுத்து ஸ்ரிதிகா என்னையும் என் முதல் மனைவியையும் சேர்த்து வைக்க ட்ரை பண்ணாங்க.
அந்த டைம்ல எனக்கும் இவங்களோட பிரச்சினை தெரிய வந்துச்சு. நீங்களும் உங்க ஹஸ்பண்ட் கிட்ட பேச ட்ரை பண்ணுங்க. அதை சரி பண்ண ஏதாவது பண்ணுங்கன்னு ஷூட்டிங் ஸ்பாட்ல வச்சு சொல்லிட்டே இருப்பேன். அப்ப கூட நாங்க பிரண்ட்ஸா தான் இருந்தோம். ரெண்டு பேரும் ரொம்ப சப்போர்ட்டிவா தான் இருந்தோம். அதுக்கப்புறம் ரெண்டு பேரும் புரிஞ்சு கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணப்போ எங்களை சுத்தி இருக்கிறவங்களும் அக்செப்ட் பண்ணிக்கிட்டாங்க என ஓப்பனாக பேசியுள்ளார்.