அந்தப் படம் பிளாப்புனு முதல் நாளே நான் சொல்லிட்டேன்.. அவங்க யாரும் கேட்கல.. நடிகர் சந்தானம் ஓபன் டாக்..!

By Nanthini on வைகாசி 16, 2025

Spread the love

நடிகர் சந்தானம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் காமெடியனாக அறிமுகமாகி இருந்தார். ஆரம்பத்தில் பல நடிகர்களோடு சிறுசிறு கேரக்டரில் நடித்து வந்த சந்தானம் தற்போது கதாநாயகனாக வளர்ந்து நிற்கிறார். அதேசமயம் அவர் பற்றிய சர்ச்சைகளும் வதந்திகளும் அடிக்கடி பரவிக் கொண்டிருக்கிறது. சந்தானம் மற்ற நடிகர்களை அடிக்கடி உருவாகியது என்பது பிரபலமாகி கொண்டு தான் இருக்கிறது. இப்போது தான் பழைய மாதிரி காமெடி கேரக்டர்களில் நடிக்க மாட்டேன் இனி அடுத்தவர்களை உருவ கேலி செய்வதுபோல கேரக்டரில் நடிக்க எனக்கு பிடிக்கவில்லை, ஆரம்பத்தில் நடித்தது பார்த்து இப்போ எனக்கே மாற்றம் தேவைப்படுகிறது என சந்தானம் தெரிவித்திருந்தார்.

ஏ1 வெற்றி... வித்தைக்காரனாக அவதாரம் எடுத்த நடிகர் சந்தானம் | Actor Santhanam  New Movie Shooting Shortly - Tamil Filmibeat

   

 

   

தற்போது சந்தானம் டிடி நெட் லெவல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த திரைப்படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வரும் சந்தானம் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஆல் இன் ஆல் அழகுராஜா படம் பிளாப் ஆனதற்கான காரணம் குறித்து பேசி உள்ளார். அதில், நான் முழு ஸ்கிரிப்டையும் படித்து முடித்து முதல் நாள் ஷூட்டிங்கின் முடிவுலையே படம் ஹிட் ஆகுமா, பிளாப் ஆகுமா என்பதை சொல்லிவிடுவேன். அதன்படி தான் ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் நான் கமிட் ஆகும்போது இந்தப் படம் பிளாக் ஆகும் என்று படத்தின் இயக்குனர் ராஜேஷிடம் கூறிவிட்டேன். காரணம் அந்த படத்தில் கதையின் கருவே அடிவாங்கி விட்டது. கரீனா சோப்ரா என்ற பெயரில் வரும் பெண் கதாபாத்திரத்தை ஹீரோயின் சந்தேகப்படும்.

 

அந்தப்படம் ஃப்ளாப்புன்னு முதல் நாள்லேயே சொல்லிட்டேன்.. யாருமே கேட்கல' - ஆல்  இன் ஆல் அழகுராஜா குறித்து சந்தானம் பேட்டி!

அதே வேளையில் வில்லனாக வரக்கூடிய சீனிவாச ராவ் அந்த கதாபாத்திரத்தை விரும்புவார். கரீனா சோப்ரா கதாபாத்திரத்தில் நான் நடிக்கும்போதே இதற்கு அதிகமான மெனக்கெடல் வேண்டும் என்று கூறினேன். அவ்வை சண்முகி போன்ற மேக்கப் தேவை என்றேன். காரணம் படத்தை பார்ப்பவர்கள் ஆஹா எவ்வளவு மெனக்கெட்டு இருக்கிறார்கள் என்று நினைக்க வேண்டும். அப்போதுதான் இது வொர்க் அவுட் ஆகும். அவ்வை சண்முகி படத்தில் ஒரு பெண்ணை ஒருவர் காதல் செய்வார். ஆனால் அந்தப் பெண் ஒரு ஆண் என்று தெரிகிறது. அது பார்க்கும் ஆடியன்ஸ்க்கு ஓகேவாக இருந்தது.

சந்தானத்துடன் கார்த்தியின் வெறித்தனமான த்ரோபேக் படம் இந்த காரணத்திற்காக  இதயங்களை வென்றது

காரணம் கமல் சார் போட்ட மேக்கப் தான். ஆனால் இந்த படத்தில் அப்படி நடக்கவில்லை. இங்கே ஒரு ஆணை பெண்ணாக காண்பித்தது ஒரு பக்கம் என்றால் மற்றொரு பக்கம் அவரை வில்லன் காதல் செய்வது போல காண்பித்தார்கள். அதனால் அது வொர்க் அவுட் ஆகவில்லை. காரணம் இங்கு நார்மலான மேக்கப் மட்டும் தான் இருந்தது. இதை நான் ஆரம்பத்திலேயே தயாரிப்பாளர் தரப்பிடமும் ராஜேஷிடமும் கூறி அவர்கள் கேட்கவில்லை. பெரும்பாலும் எனக்கு முதல் நாளிலேயே இந்த படம் ஹிட் ஆகுமா என்று கூறி விடுவேன் என சந்தானம் கூறியுள்ளார்.