தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் தனித்துவமான பண்பை கொண்டவர். சினிமாவில் நடிப்பதோடு தன்னுடைய வேலை முடிந்து விட்டது என்று நினைக்கக் கூடியவர் தான் அஜித். கடந்த சில வருடங்களாகவே எந்த வித டிவி சேனல்களிலும் அல்லது தனிப்பட்ட முறையிலும் youtube சேனல்களுக்கு கூட இவர் பேட்டியளிப்பதை தவிர்த்து வருகின்றார். அதனைப் போலவே பட விளம்பர நிகழ்ச்சிகளிலும் கூட அஜித் பங்கேற்பது கிடையாது. சினிமாவை தாண்டி தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருவதில் ஆர்வம் காட்டக் கூடியவர். கார் பந்தயங்கள் மூலம் அவரது கனவை நிறைவேற்றும் வேளையில் முழு ஈடுபாட்டோடு செய்து கொண்டிருக்கின்றார். அதில் தொடர்ந்து பல சாதனைகளையும் செய்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படியான நிலையில் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படத்தில் இடம் பெற்ற கனிமா பாடல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனிடம் அஜித் மன்னிப்பு கேட்ட ஒரு சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை சந்தோஷ் நாராயணன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில், ஒருமுறை நான் அஜித் சாரை விமான நிலையத்தில் சந்தித்தேன். நான் யார் என்றே தெரியாமல் என்னிடம் ஐந்து நிமிடம் பேசிக் கொண்டிருந்தார்.

எனக்கு பொதுவாகவே நான் யாரென்று கூறிக் கொள்ளும் பழக்கம் கிடையாது. அவருக்கு நான் யார் என்று தெரியாததால் என்ன செய்து கொண்டு இருக்கீங்க என்று கேட்டார். அப்போது மியூசிக் செய்து கொண்டு இருக்கிறேன் என்று நான் கூறினேன். உடனே அவர் நல்லா பண்ணுங்க நல்லா வருவீங்க சீக்கிரமே நல்லா வருவீங்க என்று கூறினார். எனக்கு எப்படி என்னுடைய பெயர், நான் செய்து கொண்டிருக்கும் வேலை குறித்து சொல்ல தோணவில்லையோ அதேபோல அஜித் சாரும் என்னிடம் அப்படியான தகுதிகள் எதுவும் எதிர்பார்க்காமல் பேசினார்.

நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது என்னுடைய மனைவி மீனாட்சி ஓடி வந்து, இவர்தான் சந்தோஷ் நாராயணன் இவர் இது போன்ற படங்கள் எல்லாம் செய்துள்ளார் என்று அவரிடம் கூறினார். என்னுடைய மனைவி கூறியதும் அஜித் சார் என்னை தனியே கூட்டிக் கொண்டு சென்று ரொம்ப சாரிங்க என்று சொன்னார் என்ற சந்தோஷ் நாராயணன் அந்த பேட்டியில் கூறியுள்ளார். சந்தோஷ் நாராயணன் யார் என்றே தெரியாமல் அவர் தன்னிடம் பேசுகின்றார் என அவரை மதித்து பேசிய அஜித்குமார் அவர் யார் என்று தெரிந்த பிறகு மிகவும் வருத்தப்பட்டதும் மன்னிப்பு கேட்டது பலரையும் வியக்க வைத்துள்ளது.
