எல்லா விஷயத்திலும் கெட்டிக்காரரான எம்ஜிஆர் அது ஒன்னுல மட்டும் கொஞ்சம் வீக்கானவரா?.. பலரும் அறியாத சுவாரசிய விஷயம்..!

By Nanthini on வைகாசி 16, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என்று பன்முக திறமை கொண்ட கலைஞராக வலம் வந்தவர் தான் எம்ஜிஆர். இவர் அரசியலிலும் கலக்கினார். முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தான் எம்ஜிஆர் இருந்தார். கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட இந்த கட்சியில் இருந்து கொண்டு மூகாம்பிகை கோவிலுக்கு சென்றது, மருதமலை கோவிலுக்கு சென்றது என்று எம்ஜிஆர் கட்சியில் சில சலசலப்புகளை சந்தித்து இருந்தாலும் படப்பிடிப்பில் சக நடிகையின் மூலமாக ஒரு சம்பவத்தை எதிர்கொண்டார். நாடக நடிகரான எம்ஜிஆர் 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலமாக தான் துணை நடிகராக சினிமாவில் நுழைந்தார். அதன்பிறகு தொடர்ந்து பல படங்களில் துணை நடிகர்கள் மற்றும் இரண்டாவது நாயகன் என அழைத்து வந்த எம்ஜிஆர் 10 ஆண்டு இடைவேளைக்கு பிறகு 1947 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.

Former Chief Minister of Tamil Nadu, MG Ramachandran Memorial Day | MGR  Memorial Day: ‛மூன்றெழுத்தில் உன் மூச்சிருக்கும்... முடிந்த பின்னாலும் உன்  பேச்சிருக்கும்'

   

 

   

முதல் படத்தில் இவருடன் நடிக்க முடியாது என்ற சில நடிகைகள் மறுத்த சம்பவமும் பல நடந்து உள்ளது. பல தடைகளை கடந்து தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக் கொண்ட எம்ஜிஆர் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் தனக்கு என்று தனிமுத்திரையை பதித்தார். இவர் முதல் படமான நாடோடி மன்னன் என்ற படத்தை இயக்கி தயாரித்த நிலையில் பெரிய வெற்றியை பெற்று தந்தது. அடுத்தடுத்து பல வெற்றிகளை கொடுத்த எம்ஜிஆர் தன்னுடைய படங்கள் தொடர்பான முடிவை தானே எடுக்கும் நிலைக்கு உயர்ந்தார்.

 

எம்ஜிஆர் தத்துவப் பாடல்கள்: இன்றைய தலைமுறைக்கும் நம்பிக்கைச் சுடரேற்றும்

 

இப்படி சினிமாவில் கலக்கிய எம்ஜிஆர் ஒரு விஷயத்தில் மட்டும் வீக்கானவர். அதாவது எம்ஜிஆர் காலத்திலும் சரி, அதற்கு முன்பும் சரி சினிமாவில் நடித்த பிரபலங்கள் பலரும் பாடிக்கொண்டே நடிக்கும் திறமையை கொண்டிருந்தனர். எம்ஜிஆரும் பாடி நடிக்கக்கூடியவராக இருந்தாலும் கே ஆர் ராமசாமி மாதிரியே அல்லது டி ஆர் மகாலிங்கம் மாதிரியோ எம்ஜிஆரால் கம்பீரமாக பாட முடியாது. அதன் காரணமாகத்தான் எம்ஜிஆருக்கு பல பின்னணி பாடகர்கள் பாடினர். எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த முதல் படத்தில் அவருக்காக பாடியவர் மாரியப்பன் என்பவர்.

HBD TMS: மூச்சு விடாமல் பாடிய முதல் பாடகர்; டி.எம்.ஸ்-க்கு முதல் வாய்ப்பு  கிடைத்தது எப்படி?

அன்றைய காலகட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற பாடகராக இருந்த திருச்சியில் லோகநாதனின் மாமா தான் இந்த மாரியப்பா. எம்ஜிஆர் நடித்திருந்த பணக்காரி என்ற படத்தில் கேவி மகாதேவன் எம்ஜிஆருகாக ஒரு பின்னணி பாடலை பாடியுள்ளார். எம்ஜிஆர் சினிமாவில் ஒரு கதாநாயகனாக நிலை பெற்றதற்கு பிறகு சி ஏ ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், டி எம் சௌந்தரராஜன், ஏ எம் ராஜா ஆகிய நான்கு பேரும் எம்ஜிஆருக்காக பாடிக்கொண்டிருந்தனர். ஒரு காலகட்டத்திலே மற்ற மூன்று பேரையும் தாண்டி எம்ஜிஆரின் பெரும்பாலான படங்களில் பாடும் வாய்ப்பை பெற்றவர் டி எம் சௌந்தரராஜன். எம்.ஜி.ஆருக்கும் டி.எம். சௌந்தரராஜனுக்கும் இடையேயான குரல் பொருத்தம் சினிமாவில் அவ்வளவு கச்சிதமாக அமைந்திருந்தது.