என் ராசாவின் மனசிலே படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?.. பல வருடம் கழித்து மனம் திறந்த கஸ்தூரிராஜா..!

By Nanthini on மே 16, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்த கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் தான் சண்முக பாண்டியன். இவ்வாறு சகாப்தம் என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான நிலையில் அதனைத் தொடர்ந்து மதுரவீரன் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படைத்தலைவன் என்ற புதிய திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தத் திரைப்படம் வருகின்ற மே 23ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

vijayakanth in padai thalaivan via ai technology

   

இதனை தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்த நிலையில் நடிகர் சசிகுமாரும் கலந்துகொண்டு சண்முக பாண்டியன் வாழ்த்தினார். இவரைத் தொடர்ந்து இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் கஸ்தூரிராஜா, பத்திரிக்கையாளர்கள் மனசு வைத்தால் படம் ஓடும். படைத்தலைவன் என்பதை ஏங்க வைக்கக்கூடிய தலைப்பு. விஜயகாந்தின் ரசிகர்களாக இல்லாதவர்கள் யாரும் இங்கு இல்லை. நான் அவருடன் சேர்ந்து படம் செய்துள்ளேன். என் முதல் படமான என் ராசாவின் மனசிலே படத்தில் நாயகனாக முதலில் தேர்வானவர் தேமுதிக பொருளாளராக இருந்த சுதீஷ் தான்.

   

News18

 

அது அவருக்கே தெரியாது. கேமராமேன் நன்றாக உழைத்து உள்ளார். சண்முக பாண்டியன் அப்படியே விஜயகாந்த் மாதிரி உள்ளார். சண்டைக் காட்சிகளில் சர்வ சாதாரணமாக பயமின்றி நடித்துள்ளார். இந்த படம் நன்றாக வரும் என்று பேசி உள்ளார். கஸ்தூரிராஜா தமிழ் சினிமாவில் ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் பாடலாசிரியர் மற்றும் நடிகராகவும் உள்ளார். இவர் செல்வதாகவன் மற்றும் நடிகர் தனுஷின் தந்தை. நடிகர் விசுவுடன் 16 க்கும் மேற்பட்ட படங்களில் இவர் பணியாற்றியுள்ளார். வீட்டை விட்டு வந்த இவர் சென்னையில் ஒரு ஆலையில் பணியாற்றினார்.

வடிவேலுவ நான் தான் கூப்டேன் - அங்கதான் மிகப்பெரிய ட்விஸ்ட்..!

இவர் என் ராசாவின் மனசிலே, ஆத்தா உன் கோவிலிலே, நாட்டுப்புறப்பாட்டு, எட்டுப்பட்டி ராசா, என் ஆசை ராசாவே மற்றும் கும்மி பாட்டு உள்ளிட்டா பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் முதன்முதலாக இயக்கிய என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் கதாநாயகராக ராஜ்கிரன் நடித்திருந்த நிலையில் மீனா அவருக்கு ஜோடியாக நடிக்க இளையராஜா இசையமைத்திருந்தார். 1991 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் முதல் தேர்வாக இருந்தது தேமுதிகவின் பொருளாளரும் விஜயகாந்தின் மச்சானும் பிரேமலதாவின் உடன் பிறந்த சகோதரருமான சுதீஷ் தான் என்று படைத்தலைவன் நிகழ்ச்சியில் கஸ்தூரிராஜா வெளிப்படையாக பேசியுள்ளார்.