லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. இந்த படத்தில் பல வருடங்களுக்குப் பிறகு த்ரிஷா விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார். படத்தில் விஜய்க்கு வில்லனாக சஞ்சய் தத் நடித்தார். இந்த படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது.
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகும் விடாமுயற்சி படத்தை இயக்குனர் மகள் திருமேனி இயக்குகிறார். படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதல் ஷூட்டிங் கிடப்பில் போடப்பட்டது. இந்த படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா தான் நடிக்கிறார்.
இந்த நிலையில் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்கப் போகும் நடிகர் யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் பிரபல வில்லன் நடிகர் சஞ்சய் தத் விடாமுயற்சி படத்திலும் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கேஜிஎப் 2 படத்தின் மூலம் வில்லனாக என்ட்ரி கொடுத்த சஞ்சய் தத் லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து அசத்தி இருந்தார்.
கடந்த சில மாதங்களாக விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அர்பைஜனில் நடைபெற்றது. தற்போது ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டதால் நடிகர் அஜித்தும் சுற்றுப்பயணம் சென்று விட்டார். மீண்டும் சூட்டிங் நடக்கும் போது சஞ்சய் தத் நடிக்க உள்ள காட்சிகள் படமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.