நிறைமாத நிலவே வா வா.. பிரபல சின்னத்திரை நடிகைக்கு பிரம்மாண்டமாக நடந்த வளைகாப்பு.. லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..!!

By Priya Ram

Published on:

சின்னத்திரை சீரியல் நடிகை ஸ்ரீதேவி 2004-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான புதுக்கோட்டையில் இருந்து சரவணன் என்ற படத்தின் மூலம் வெள்ளித் துறையில் அறிமுகமானார். அவர் நடிகர் தனுஷுக்கு அக்காவாக நடித்தார்.

   

சன் டிவியில் ஒளிபரப்பான செல்லமடி நீ எனக்கு சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த ஸ்ரீதேவி அடுத்தடுத்து சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அவர் வில்லியாக நடித்த கதாபாத்திரம் அனைத்தும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது.

சுமார் 30-க்கும் மேற்பட்ட சீரியல்களில் ஸ்ரீதேவி நடித்துள்ளார். தற்போது பொன்னி, மோதலும் காதலும் போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகை ஸ்ரீதேவி அசோக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இரண்டாவது முறை கர்ப்பமான ஸ்ரீதேவிக்கு ஐந்தாவது மாதம் பூச்சூடல் வளைகாப்பு நடைபெற்றது. அப்போது தனது கணவருடன் ஸ்ரீதேவி டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான நடிகை ஸ்ரீதேவிக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு நடைபெற்றது. இதில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

author avatar
Priya Ram