உங்களுக்கு இந்த படம் வேண்டாம் … பாக்யராஜ் சொன்னதைக் கேட்காத தயாரிப்பாளர் சங்கிலி முருகன்.. கடைசியில் நடந்தது இதுதான்!

By vinoth on கார்த்திகை 21, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் பாக்கியராஜ். தொடர்ந்து 7 வெள்ளி விழா படங்களைக் கொடுத்த ஒரே தமிழ் இயக்குனர் என்ற பெருமையை பெற்ற பாக்யராஜ், இந்திய அளவிலேயே திரைக்கதை மன்னன் என்ற பெயரைப் பெற்றவர்.

பல படங்களை இயக்கி அப்போது பீக்கில் இருந்த பாக்யராஜ் 1982 ஆம் ஆண்டு நடிப்பு மற்றும் இயக்கத்தில் நான்கு படங்கள் ரிலீஸாகி நான்குமே சூப்பர்ஹிட் ஆனது. அதன் மூலம் அவர் ஒரு முன்னணி கதாநாயக நடிகனானார். ஒரு கட்டத்தில் ரஜினி, கமல் படங்களை விட அதிகமாக வசூல் செய்யும் படங்களாக பாக்யராஜின் படங்கள் அமைந்தன.

   

அவரே கதாநாயகனாக இருந்ததால் தனக்கான கதைகளை மட்டுமே எழுதவேண்டிய சூழல் வந்ததால் அவரால் இயக்குனராக ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் ஜொலிக்க முடியவில்லை. அதற்குக் காரணம் அவர் தனக்காகவே மட்டும் கதைகளை யோசித்து எழுத வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததுதான் என அவரேக் கூறியுள்ளார். அவர் இயக்குனராகவோ அல்லது நடிகராகவோ மட்டுமே தொடர்ந்திருந்தால் இன்னும் பல காலம் நீடித்திருக்க முடியும்.

   

பாக்யராஜால் பிரகாசம் பெற்ற நடிகர்கள் பலர். அதில் செந்தாமரை, செந்தில் வரிசையில் இணைவார் தயாரிப்பாளர் சங்கிலி முருகன். 80 களில் தமிழ் சினிமாவில் முக்கியமான வில்லன் நடிகராக இருந்தவர் சங்கிலி முருகன். பட படங்களில் ரேப் சீன்களில் நடித்து பெண்களையும் குழந்தைகளையும் பயமுறுத்தியவர்.

 

#image_title

இவர் நடிகராக கவனம் பெற்றது பாக்யராஜ் இயக்கிய ஒரு கை ஓசை படத்தில் நடித்த சங்கிலி கதாபாத்திரத்தின் மூலமாகதான். அந்த கதாபாத்திரத்திற்குக் கிடைத்த ஆதரவின் காரணமாகதான் அவர் பெயரே சங்கிலி முருகன் என்றானது.

இதுபற்றி பேசியுள்ள அவர் “நான் பாக்யராஜின் முதல் படமான சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் நடிக்க வேண்டும் என அவரிடம் கேட்டேன். ஆனால் அவர் இதில் வேண்டாம். உங்களுக்கு அடுத்த படத்தில் முக்கியமானக் கதாபாத்திரம் தர்றேன் என்றார். ஆனால் நான் பிடிவாதமாக ஓடுற ரயில நான் ஏறிக்குறேன் என சொன்னேன். அதனால் அந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் கொடுத்தார். அதன் பின்னர்தான் ஒரு கை ஓசையில் சங்கிலி வேடம் கொடுத்து தூக்கிவிட்டார்” எனக் கூறியுள்ளார்.