விஜய்க்கு நான் அனுப்பிய அந்த மெசேஜ்… அவரு அதுக்கு பண்ணுன Reply… மனம் திறந்த உதயநிதி..!

By Soundarya on கார்த்திகை 21, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் விஜய் கடைசியாக கோட் படத்தில் நடித்து முடித்த நிலையில் தளபதி 69 படத்தில் மட்டும் அடுத்து நடித்து விட்டு அதன்பிறகு சினிமாவிலிருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இதனால் ரசிகர்கள் கவலையுடன் இருந்தாலும் மறுபுறம் அரசியலில் இறங்கியுள்ளதால் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

#image_title

இவருடைய தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் கடந்த மாதம் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. லட்சோப லட்ச கூட்டம் வந்து அலைமோதியது. தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் வந்து பல லட்சம் தொண்டர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள். இதனால் விஜய் அரசியலில் மிக தீவிரமாக இறங்கியுள்ளார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் பல்வேறு விதமான விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். முன்னதாக விஜய் பொதுத்தேர்வில்  நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசும் வழங்கி கௌரவப்படுத்தினார். தற்போது தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார்.

   
   

#image_title

 

இந்நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், விஜய் குறித்து பேசியுள்ளார். அதாவது கோபிநாத் அவரிடம் உங்களுக்கும், விஜய்க்குமான நட்பு எப்படி இருக்கிறது என்று கேட்டார். அதற்கு அவருடைய பிறந்தநாளன்று மெசேஜ் அனுப்பினேன். அதற்கு அவர் நன்றி சொல்லி பதில் அனுப்பினார் அவ்வளவு தான். வேறு எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

Vijay, Udhayanidhi Stalin to re unite for movie soon After 13 years of kuruvi | Vijay-Udhayanidhi Stalin Reunite: மீண்டும் குருவி கூட்டணி...13 ஆண்டுகளுக்குப் பின் இணையும் விஜய்-உதயநிதி!

அந்த அளவிற்கு தான் எனக்கும் அவருக்குமான நட்பு இருக்கிறது. அவருடைய நிகழ்ச்சியெல்லாம் நடந்தால் அவரிடம் கேட்காமல் என்னிடம் தான் கேட்கிறார்கள். அரசியல் தலைவரான பிறகு அவருக்கும் எனக்குமான உறவு எப்படியிருக்கிறது என்று சொன்னால், எங்க வீட்டில் ஒரு நிகழ்ச்சிக்காக  வந்திருந்தார். அப்போது ஒரு பத்து நிமிடம் இருந்து பேசினார். அப்போது என்னை பாராட்டினார். பயங்கரமாக பண்ணுறப்பா என்கிறார். மற்றபடி நாங்கள் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை.