சுறா படம் எவ்வளவோ பரவால்ல… அந்த கதைய தொட்டாலே ஆண்ட்டி செண்ட்டிமெண்ட்தான் – கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்லும் தயாரிப்பாளர்!

By vinoth on செப்டம்பர் 18, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் இன்று புகழின் உச்சத்தில் இருக்கிறார் நடிகர் விஜய், தன்னுடைய புகழின் உச்சியில் இருக்கும் விஜய் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதற்கேற்றார் போல அவரின் சுமாரான படங்கள் கூட நல்ல வசூலைப் பெற்று வருகின்றன.

விஜய்யின் இந்த அசுர மார்க்கெட் வளர்ச்சி சமிபகாலத்தில் எக்குதப்பாக வளர்ந்து வந்தது. இதற்கு அவர் அட்லி, முருகதாஸ் மற்றும் லோகேஷ் போன்ற புதிய தலைமுறை இயக்குனர்களோடு கைகோர்த்ததுதான். அதனால்தான் எட்ட முடியாத உயரத்தில் இருந்த ரஜினியை கூட எட்டிப் பிடித்தார்.

   

vijay in sura

   

காதல் படங்களில் அதிகமாக நடித்து வந்த விஜய் 2000 களில் தன்னுடைய ரூட்டைக் கண்டுபிடித்து கமர்ஷியல் மாஸ் மசாலா படங்களாக நடித்துத் தள்ளினார். வழக்கமாக நடிகர் தங்களுடைய 50 ஆவது படத்தை கண்ணும் கருத்துமாக நல்ல கதை, நல்ல இயக்குனரை வைத்து எடுக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் அதற்கு நேர்மாறாக விஜய் சுறா என்ற மொக்கைப் படத்தைக் கொடுத்தார். அந்த படத்தின் இயக்குனர் எஸ் பி ராஜ்குமார் அதற்கு முன்னர் பெரிதாக எந்த ஹிட் படத்தையும் கொடுத்ததில்லை.

 

இந்நிலையில் இந்த படம் பற்றி சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியுள்ளார் அந்த படத்தின் தயாரிப்பாளர் சங்கிலி முருகன். அதில் “இப்போது வரும் படங்களுக்கு சுறா எவ்வளவோ பரவாயில்லை. வடிவேலு காமெடி, விஜய் காமெடி, தமன்னா காமெடியெல்லாம் நல்லாதான் இருக்கும்.

vadivelu in SURA movie

இந்த மீனவப்பகுதி கதையை தொட்டாலே அது ஏனோ தெரியல ஓட மாட்டேங்குது.. படகோட்டி, செம்மீன் போன்ற படங்கள்தான் விதிவிலக்கு. கடல் மீன்கள், கடல் பூக்கள் கூட ஓடலியே. ஒரு கட்டத்துல எனக்கு என்னமோ தப்பா இருக்கேன்னு தோனுச்சு. ஆனாலும் நம்ம சொன்னா கேக்க மாட்டாங்களே. அதனால என்ன பண்றது” எனப் பேசியுள்ளார். கதையும் திரைக்கதையும் ஒழுங்காக அமைக்காமல் ஹீரோ பில்டப்பை மட்டும் நம்பி எடுக்கப்பட்ட சுறா படத்தின் தோல்வியை ஒத்துக்கொள்ளாமல் இப்படி பூசி மழுப்புகிறாரே என ரசிகர்கள் கமெண்ட்டில் பொங்கல் வைக்க ஆரம்பித்துள்ளனர்.