இந்தி சினிமா பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த தமிழ் ரசிகர்களை தமிழ் பாடல்கள் பக்கம் திருப்பியவர் இளையராஜா என்றால், இந்தி ரசிகர்களையும் தமிழ் சினிமா பாடல்களைக் கேட்க வைத்தவர் ஏ ஆர் ரஹ்மான் என்று சொல்வார்கள்.
தான் அறிமுகமான ரோஜா திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் ஹிட்டடித்தன. அதன் பின்னர் ரஹ்மான் மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோரோடு இணைந்து பணியாற்றிய படங்களின் பாடல்கள் எல்லாம் இந்தியா முழுவதும் வைரல் ஹிட்டாகின. பாடல்களுக்காகவே சில பாடல்கள் ஹிட்டாகின என்பதும் குறிப்பிடத்தக்கது.

Harris jayaraj
ஏ ஆர் ரஹ்மான் 1992 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதில் இருந்து 2001 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து அவர்தான் சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார். இப்படி எந்தவொரு கலைஞரும் தொடர்ந்து விருது பெற்றதில்லை.
ஆனால் 2001 ஆம் அவரிடம் இருந்து அந்த விருதை தட்டிப் பறித்தார் ஹாரிஸ் ஜெயராஜ். மின்னலே படத்துக்காக அவர் உருவாக்கிய பாடல்கள் எல்லாம் அப்போதைய இளைஞர்களுக்கு தேசிய கீதம் போல அமைந்திருந்தன. ரஹ்மான் பாணியிலேயே ஆனால் ஏதோ ஒன்று வித்தியாசமாக இந்த பாடல்களில் இருக்கிறதே என ரசிகர்கள் உருகி உருகி ரசித்தார்கள்.
அப்படி 2001 ஆம் ஆண்டு அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜ் அதன் பிறகு 15 ஆண்டுகள் ரஹ்மானுக்கு இணையான ரசிகர்களைக் கொண்டு தொடர்ந்து ஹிட் பாடல்களாக கொடுத்திருந்தார். அனிருத் வருகைக்குப் பிறகு ஹாரிஸின் சினிமா கேரியரில் ஒரு தேக்க நிலை உருவாக ஆரம்பித்தது. இப்போது கைவசம் அதிகம் படங்கள் இல்லாமல் இருக்கிறார் அவர்.

haris and rahman
ஹாரிஸின் மெல்லிசை பாடல்கள் பல சர்ச் பாடல்களில் இருந்து காப்பி அடிக்கப்பட்டவை என்ற குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் வந்தாலும் அவரது பழைய பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கேட்டு ரசித்துக் கொண்டாடப்பட்டு வருகின்றன.
