தமிழ் மற்றும் தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை சிஐடி சகுந்தலா. 1970 ஆம் ஆண்டு ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான சி ஐ டி சங்கர் படத்தில் அறிமுகமானதால் அதன்பிறகு சிஐடி சசிகலா என்று அழைக்கப்பட்டார். சேலம் மாவட்டம் அரிசி பாளையத்தை சேர்ந்த இவர் சென்னையில் லலிதா, பத்மினி மற்றும் ராகினி ஆகியோர் நடத்தி வந்த நடன நிகழ்ச்சியில் பங்கேற்று நடனம் ஆடினார்.
அதன் மூலம் கிடைத்த அறிமுகத்தை தொடர்ந்து திரையுலகில் நுழைந்து சிறிய சிறிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். இவர் படிக்காத மேதை, கை கொடுத்த தெய்வம், தவப்புதல்வன் மற்றும் வசந்த மாளிகை என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட மொழிகளிலும் இவர் நடித்து வந்துள்ளார்.
சினிமாவில் இருந்து விலகிய பிறகு சீரியலில் நடித்து வந்த இவர் வயது மூப்பு காரணமாக பெங்களூரில் உள்ள தனது மகன் வீட்டில் தங்கி இருந்தார். இவருக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இவருடைய மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.