CINEMA
பிரசண்டான அம்மா, அப்பா.. ஆப்சென்டான மனைவி, பிள்ளைகள்.. விஜயின் கட்சிக்கொடி அறிமுக விழாவிற்கு சங்கீதா வராதது ஏன்..?
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வருகிற செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது. தனது 69 ஆவது படத்துடன் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட போவதாக விஜய் ஏற்கனவே அறிவித்தார். தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியையும் விஜய் தொடங்கினார். உறுப்பினர் சேர்க்கை, முக்கிய பிரமுகர்கள், நியமனம், மாநாடு என அடுத்தடுத்த பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் விஜய் இன்று தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சி கொடியை அறிமுகம் செய்தார். பனையூரில் இருக்கும் கட்சி தலைமை அலுவலகத்தில் கொடியை அறிமுகம் செய்யும் விழா மிக விமர்சையாக நடைபெற்றது. இந்த நிலையில் சிவப்பு மஞ்சள் நேர பின்னணியில் போர் யானை, வாகை மலர் உருவங்கள் அந்த கொடியில் இடம் பெற்றுள்ளது. இது மட்டுமில்லாமல் தமிழன் கொடி பறக்கும் என்ற பாடலும் வெளியிடப்பட்டது. இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய விஜய் கூறியதாவது, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிய அறிமுகப்படுத்தியது மிகவும் பெருமையாக உள்ளது. இது கட்சிக்கான கொடி அல்ல.
தமிழகத்தின் வருங்கால வெற்றி கொடியாகவே பார்க்கிறேன். இந்த கொடி பற்றிய விளக்கத்தை கட்சியின் முதல் மாநாட்டில் கூறுகிறேன் என தெரிவித்துள்ளார். இந்த விழாவில் விஜயின் பெற்றோர் எஸ்.ஏ சந்திரசேகர், சோபா ஆகியோர் பங்கேற்றனர். ஆனால் விஜயின் மனைவி சங்கீதா, பிள்ளைகள் ஜேசன் சஞ்சய், திவ்யா சாஷா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. விஜயின் அரசியல் வாழ்க்கையில் இந்த விழா முக்கியமாக கருதப்பட்டது. இந்த விழாவில் விஜயின் மனைவியும், பிள்ளைகளும் பங்கேற்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பே விஜயும் சங்கீதாவும் பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக முக்கியமான நிகழ்ச்சியில் சங்கீதா அவரது பிள்ளைகள் கலந்து கொள்ளவில்லை. இதனால் கட்சி தொடங்குவதில் சங்கீதாவுக்கு விருப்பம் இல்லையா அல்லது வேறு ஏதாவது காரணங்களால் இந்த விழாவிற்கு வராமல் உள்ளார்களா என்பது தெரியவில்லை. சமூக வலைதளத்தில் விஜய் சங்கீதா விவாகரத்து செய்தி உண்மைதானா என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.