ASTROLOGY
வீட்டில் தெய்வம் தங்க வேண்டுமா…? அப்போ பூஜையறையில் கட்டாயம் இந்த பொருட்களை வாங்கி வைங்க…
வீட்டில் பூஜை அறை என்பது முக்கியமான ஒன்று பொதுவாக எல்லோரும் தினமும் இருவேளை அல்லது ஒரு வேளையாவது வீட்டில் விளக்கு ஏற்றி செல்வம் பெருகவும், நோய் நொடி இல்லாமல் வாழவும், வீடு தெய்வ கடாட்சமாக தெய்வங்களால் நிறைந்திருக்கவும் பிரார்த்திப்பர். அப்படி நம் வீட்டில் தெய்வம் நிறைந்திருக்க வேண்டுமானால் நம் வீட்டு பூஜை அறையில் ஒரு சில பொருட்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அது என்னவென்று இனி காண்போம்.
நம் வீட்டு பூஜை அறையில் ஒரு சில பொருட்கள் கட்டாயம் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் வீட்டில் தெய்வ சக்தியை ஈர்த்து நல்லவைகள் நடக்கும். நேர்மறை சக்திகள் பெருகும். முதலில் நம் பூஜை அறையில் இருக்க வேண்டியது விளக்கு அதிலும் குறிப்பாக மண் விளக்கு ஏற்றுதல் மிகவும் சிறப்பானது.
ஊதுபத்தி சாம்பிராணி ஆகியவற்றின் நறுமணம் பூஜை அறையில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இது தீய சக்திகளை விரட்டியடிக்கும். பூஜை செய்வதற்கு பித்தளையால் ஆன மணி கண்டிப்பாக பூஜை அறையில் இருக்க வேண்டும். இந்த மணியை அடிக்கும்போது எதிர்மறை சக்திகள், தீய சக்திகள் வீட்டை விட்டு வெளியேறி நேர்மறை சக்திகள் வீட்டுக்குள் வரும்.
பூஜை அறையில் தாமிரம் அல்லது செம்பினால் ஆன பாத்திரத்தில் நீர் வைக்க வேண்டும். அந்த நீரில் இரண்டு பூக்களை தூவி வைக்க வேண்டும். புனித நதிகளின் தீர்த்தங்கள் கிடைத்தால் அதை வைக்கும் போது மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
பூஜை அறையில் பகவத் கீதை, ராமாயணம் போன்ற தெய்வீக தன்மைகள் நிறைந்த புனித நூல்கள் கட்டாயம் இருக்க வேண்டும். அடுத்ததாக நம் வீட்டு பூஜை அறையில் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை வைக்க வேண்டும். நம் வீட்டின் தெய்வங்களின் நிழலும் முன்னோர்களின் நிழலும் அந்த கண்ணாடியில் விழுந்து அருள் பாலிப்பதாக சொல்லப்படுகிறது.
வீட்டின் பூஜை அறையில் ஒரு சிறிய கிண்ணத்தில் அரிசி, பருப்பு, சில்லறை காசுகள் போன்ற மங்களப் பொருட்களை நிரப்பி வைத்து பூஜை செய்வது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. இதனால் நம் வீட்டில் வறுமை, உணவு பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. ஆகவே நம் வீட்டில் சாமி படங்களை தவிர இந்தந்த பொருட்களை நம் வீட்டில் வாங்கி வைக்கும்போது நம் வீடு தெய்வ கடாட்சத்துடன் இருக்கும் மற்றும் பல சுப காரியங்கள் நிகழும் என்பது ஐதீகம்.