NEWS
வந்தாரை வாழ வைக்கும் மெட்ராஸ் தினம் இன்று… சிங்கார சென்னை பிறந்த வரலாறு தெரியுமா…?
வந்தாரை வாழவைக்கும் சென்னை சிங்காரச் சென்னை என்ற பெயருக்கு ஏற்ப எங்கிருந்து மக்கள் வந்தாலும் தன்னகத்தே அடைக்கலம் கொடுத்து அந்த மக்களை வாழவைக்கும் ஒரு பெரு நகரமாக சென்னை விளங்குகிறது. இந்த சென்னை மாநகரம் எப்படி உருவானது என்ற வரலாறு உங்களுக்கு தெரியுமா? அது என்ன என்பதை இனி காண்போம்.
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை தோன்றிய நாளை தான் மெட்ராஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. கிபி 1639 ஆகஸ்ட் 22 ம் தேதி அன்றுதான் சென்னை தோற்றுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் அந்த நாளை நினைவு கூறும் வகையில் மெட்ராஸ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கிழக்கு இந்திய கம்பெனி தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த இந்த நாளை கொண்டாடுவதை மெட்ராஸ் தினமாகும்.
வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கட் அப்பா நாயக்கர் பூந்தமல்லியை ஆண்ட தாமல் ஐயப்பன் நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னை என்று அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பத்திரிக்கையாளர்களான சசி நாயர் மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சென்ட் டி சௌசா மெட்ராஸ் மியூசிக் இன் ஆஸ்திரேலியா முத்தையா ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கியதே இந்த மெட்ராஸ் தினமாகும். இந்த நாளில் பழம்பெறும் மெட்ராஸ் நகரத்தின் பாரம்பரியத்தையும் இன்றைய சென்னை மாநகரம் அடைந்த பரிணாம வளர்ச்சியையும் எடுத்துரைக்கிறது.
மெட்ராஸ் தினத்தை கொண்டாடும் வகையில் சென்னையில் பல்வேறு இடங்களில் புகைப்பட கண்காட்சி, உணவு திருவிழா, மாரத்தான் ஓட்டம், கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் என பல கொண்டாட்டங்கள் இன்று நடைபெறும். சென்னையின் வளமான கலாச்சாரம் மற்றும் வரலாற்று பாரம்பரியத்தை கௌரவிக்கும் ஒரு முயற்சியாக மெட்ராஸ் தினம் கொண்டாடப்படுகிறது.
சென்னை மாநகரமானது பலவித தொழில்களுக்கு மையமாக செயல்படுகிறது. பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களையும் சென்னை கொண்டுள்ளது. இந்த மெட்ராஸ் தினத்தை கொண்டாடுவதன் மூலம் சென்னையின் பெருமையை எடுத்துரைக்கவும் அல்லது பாரம்பரியத்தை நினைவு கூறவும் இந்த நாள் உதவுகிறது.