Connect with us

பெரிய schoolஇல் தன் மகனை சேர்க்க விரும்பும் ரோகினி… ஒரு வழியாக மீனாவை மன்னிக்கும் முத்து…

NEWS

பெரிய schoolஇல் தன் மகனை சேர்க்க விரும்பும் ரோகினி… ஒரு வழியாக மீனாவை மன்னிக்கும் முத்து…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் முத்துவை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்க சென்ற மீனாவின் அம்மா எவ்வளவோ பேசியும் முத்து சமாதானம் ஆகாமல் இருப்பதை நினைத்து வருத்தப்பட்டு கொண்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது. இன்று இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை இனி காண்போம்.

இன்றைய எபிசோடில் ரோகினி மனோஜ் ஷோரூம் இல் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கே பெரிய தனியார் நிறுவன ஸ்கூல் விளம்பரத்துக்காக இருவர் வந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அவர்களிடம் ரோகிணி தன் மகனை சேர்ப்பதற்காக விரும்பி ஸ்கூல் எப்படி பீஸ் எப்படி என்னென்ன ஆக்டிவிட்டீஸ் வச்சிருக்கீங்க என்று ஆர்வமாக கேட்கிறாள். மனதிற்குள் தன் மகனை அந்த ஸ்கூலில் சேர்க்க வேண்டும் என்று எண்ணிக் கொள்கிறாள் ரோகிணி. பின்னர் அங்கு வந்த மனோஜ் நமக்கு எப்போது குழந்தை பிறக்கும் என்று நம்ம ஜோசியத்தை பார்க்கலாம் ரோகிணி ரொம்ப லேட் ஆகுது என்று கூறுகிறான். நம்ம ஃபர்ஸ்ட் கோவா போயிட்டு வரலாம் அப்படின்னு சொல்றார் ரோகிணி.

   

   

அதுக்கு அடுத்ததாக மீனா தன் பூ கட்டும் தோழிகளுடன் நின்று பேசிக் கொண்டிருக்கிறாள். அப்போது மீனாவின் தோழிகள் நீ செஞ்சது தப்புதான் மீனா அண்ணனுக்கு பிடிக்காத விஷயத்தை நீ எதுக்கு செய்ற உனக்காக அண்ணன் பூ கடை வச்சு கொடுத்தாங்க கடை போனதும் வண்டி வாங்கி கொடுத்து உனக்கு என்ன எல்லாம் பண்ணி இருக்காங்க. உன்னை தாங்குறாங்க உனக்கு கிடைச்ச மாதிரி புருஷன் யாருக்கும் கிடைக்க மாட்டாங்க ஏன் நீ அவரை நோகடிக்கிற அப்படின்னு கேக்குறாங்க. மீனா நான் என்னக்கா பண்ணட்டும் அம்மாவும் தம்பியும் கூப்பிடும்போது என்னால ஒன்னும் செய்ய முடியல என்று சொல்கிறார். இன்னொரு தோழி புருஷனை சம்மதம் பண்றதுக்கு ஒரு வழி இருக்கு. அவங்களுக்கு புடிச்ச சாப்பாடு என்னவோ அதை நல்ல சமைத்து வாய்க்கு ருசியா கொடுத்தா எந்த கோபம் இருந்தாலும் அவங்க வாயடைச்சு போயிருவாங்க பேச மாட்டாங்க என்று சொல்லுகிறார். அதைக் கேட்ட மீனா சரிக்கா நானும் அப்படியே அவருக்கு பிடிச்ச சாப்பாடு செஞ்சு கொடுக்கிறேன் என் என்று சொல்லிட்டு கிளம்புகிறாள்.

 

பின்னர் சவாரிக்கு சென்ற முத்துவின் காரில் ஏறிய பெண் தனக்கு குடும்பத்தில் நடந்த கொடுமைகளை பற்றி பேசுகிறார். தன்னுடைய புருஷனுக்கும் அண்ணனுக்கும் ஆகாததால் அவங்க இருவரும் பேச மாட்டாங்க எங்க அண்ணனுக்கு ரொம்ப உடம்பு முடியாம ஹாஸ்பிடல் ல இருக்காங்க. என் புருஷனுக்கு தெரியாம எங்க அண்ணனை பாக்க போறேன் அப்படின்னு சொல்கிறாள். மேலும் ஒரு பொண்ணு கழுத்துல தாலி ஏறிட்டா அவங்க பிறந்த வீட்ட அடியோட அவங்களோட பந்தம் போயிருமா என்று கேள்வி கேட்கிறாள் அது நறுக்கு என்று முத்தக்கு படுகிறது. அதை நினைத்துக் கொண்டு கார் செட்டிக்கு வருகிறார் முத்து.

அவரது நண்பர் முத்துவை பார்த்து ஏன்டா ஒரு மாதிரி இருக்க என்று கேட்கிறார். அதற்கு முத்து நடந்தது எல்லாம் கூறி அந்த அம்மா எப்படி கேட்டது எனக்கு ரொம்ப நறுக்குன்னு பட்டுருச்சு டா என்று சொல்கிறான். உடனே அவரது நண்பர் மீனாவின் சூழ்நிலையை விளக்குகிறார். ஆமாடா முத்து நீ பண்ணது ரொம்ப தப்புதான். ஒரு பொண்ணுக்கு வந்து பிறந்த வீடு முக்கியம் புகுந்த வீடும் முக்கியம், உன்னை எந்த அளவுக்கு நம்புறாங்களோ அந்த மாதிரி தான அவன் தம்பியை விட்டுக் கொடுக்காமல் இருக்காங்க. அது எப்படி ஒரு பொண்ணால அப்படி விட்டுட்டு இருக்க முடியும். அவன் தம்பி என்ன எல்லாம் தப்பு பண்ணினான்னு சொன்னா மீனா தாங்க மாட்டாங்கனு நீ தான் சொல்லாமல் மறைத்து வைத்திருக்கிற. ஒருவேளை சத்யா பண்ற தப்பு எல்லாம் மீனா தங்கச்சிக்கு தெரிஞ்சிருந்தா உன்ன விட அதிகமா கோவப்படுறது தங்கச்சியா தான் இருக்கும்.

அதுமட்டுமில்லாம உன் வீட்டுல உங்க அம்மா மீனா தங்கச்சியை என்னவெல்லாம் பேசுறாங்க என்னெல்லாம் கொடுமை படுத்துறாங்க. அதெல்லாம் என்னைக்காவது உன்கிட்ட வந்து கம்ப்ளைன்ட் பண்ணி இருக்காங்களா. எல்லாத்தையும் உன் குடும்பத்தை தான் குடும்பமா நினைச்சு உன் அண்ணன் பண்ணது தப்பு எல்லாத்தையுமே அவங்க பொறுத்துக்கிட்டு குடும்பத்தை கொண்டு போறாங்க. எல்லாம் உனக்காக தானே அவங்க பண்றாங்க. அப்ப நீ மட்டும் ஏன் அவங்கள இந்த மாதிரி நீ பண்ற ஏன் நீ ஆம்பளைங்கற திமிரா காட்டுறியா அப்படின்னு முத்துவின் நண்பர் கேட்கிறார். முத்து ஏன்டா நாலாம் ஆம்பள பொம்பள பிரிச்சு பார்ப்பனாடா நான் எப்படிடா அப்படி நினைப்பேன் அப்படின்னு சொல்கிறார்.

நீ அப்படி எதுவுமே நினைக்கலனா நீ மீனா தங்கச்சிட்ட ஒழுங்கா நீ போய் பேசு அவங்க பாவம்டா வீட்ல பொண்டாட்டி கிட்ட பிரச்சனைனா நம்மளால இங்க நிம்மதியா வேலை செய்ய முடியுமா நமக்கு என்னைக்குமே கடைசி வரைக்கும் நம்ம கூட வரப்போறது பொண்டாட்டி தான். நமக்காக அழுகுறதும் பொண்டாட்டி தான் அதனால அவங்க மனச நோகடிக்காத என்று கூறுகிறார். அதை மனதில் நினைத்துக் கொண்டு உடனே முத்து வீட்டுக்கு செல்கிறான்.

மீனாவிடம் முத்து உன்கிட்ட அப்படி நடந்தது தப்புதான். உன் தம்பி கிட்ட பேச கூடாதுன்னு சொன்னது தப்புதான். ஆனா நான் எல்லாம் நல்லதுக்காகவும் தான் நான் சொன்னேன் வேற எதுக்காகவும் நான் சொல்லல இனிமேல் நீ உன் தம்பிய பாக்கணும் உன் வீட்டுக்கு போனா எப்போனாலும் போ என்று சொல்லி இருவரும் சமாதானம் ஆகிறார்கள். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.

More in NEWS

To Top