CINEMA
வாழை படத்தை பார்த்துவிட்டு பாலா இயக்குனர் மாரி செல்வராஜுக்கு பண்ண விஷயம்.. வைரலாகும் வீடியோ..!!
பிரபல இயக்குனரான மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இப்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை திரைப்படம் உருவாகியுள்ளது. வருகிற 23ஆம் தேதி வாழை திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் வாழை படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்தார்.
பொன்வேல், ராகுல் ஆகியோர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளனர். இது மட்டும் இல்லாமல் கலையரசன், நகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் வாழை படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் தாணு, இயக்குனர்கள் ரஞ்சித், வெற்றிமாறன், சசி, மிஸ்கின், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சமீபத்தில் தான் வாழை படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன், மாமன்னன், பரியேறும் பெருமாள் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. அந்த வரிசையில் வாழை படமும் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் வாழை படத்தை இயக்குனர் பாலா பார்த்துவிட்டு எமோஷனல் ஆகிவிட்டார். அவர் வாழை படத்தை இயக்குனர் மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வாழ்த்தி உள்ளார் இது தொடர்பான வீடியோவும், புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
View this post on Instagram