தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. மயோசிட்டிஸ் சென்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா அதற்கான சிகிச்சை எடுத்து அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். இப்போது சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமந்தா மருத்துவம் பற்றியும் தான் எடுத்து வரும் சிகிச்சைகள் குறித்தும் பேசினார். அதனை பார்த்த மருத்துவர் ஒருவர் சமந்தா கூறும் சிகிச்சைகள் தவறானதாக இருக்கிறது.

அவரை சிறையில் தள்ள வேண்டும் என கூறியுள்ளார். அந்த கமெண்ட்டை பார்த்து சமந்தா வேதனையடைந்தார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் சமந்தா கூறியதாவது, கடந்த சில ஆண்டுகளாக எனக்கு பரிந்துரைக்கப்பட்ட அனைத்து மருந்துகளையும் நான் முயற்சி செய்தேன். அந்த பரிந்துரைகளை தகுதி வாய்ந்த நிபுணர்கள் கொடுத்தார்கள். என்னை போன்றவர்களுக்கு தனிப்பட்ட ஆராய்ச்சி செய்த பிறகு அந்த சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.

இது மிகவும் விலை உயர்ந்தவை. அந்த மருந்துகளை வாங்குவதற்கு நான் அதிர்ஷ்டசாலி. ஆனால் மருந்துகளை வாங்க முடியாதவர்கள் நிலை பற்றியும் நான் அடிக்கடி நினைத்து பார்த்து இருக்கிறேன். வழக்கமான சிகிச்சைகள் நீண்ட காலமாக என்னை குணப்படுத்தவில்லை. ஆனால் ஒரு சிலருக்கு அது பயன் அளித்திருக்கலாம். நான் மாற்று சிகிச்சைகளை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன். பல சோதனைகளுக்கு பிறகு எனக்கு உரிய சிகிச்சைகளை கண்டறிந்தேன்.

அது மற்றவர்களுக்கு முடிந்தால் பயன் அளிக்கட்டுமே என்ற நோக்கத்தில் கூறினேன். அந்த சிகிச்சை டிஆர்டிஓ-வில் 25 ஆண்டுகள் பணியாற்றிய உயர் தகுதி வாய்ந்த ஒரு மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டது. பாரம்பரிய மருத்துவத்தில் கல்வி பயின்ற போதிலும் அவர் எனக்கு மாற்று சிகிச்சையை பரிந்துரை செய்தார். இந்த நிலையில் எனக்கு கமெண்ட் செய்த இன்னொருவர் டாக்டர் என நினைக்கிறேன்.

அவர் எனது பதவியையும் நோக்கத்தையும் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்துள்ளார். அவர் வார்த்தைகளால் என்னை மிகவும் கஷ்டப்படுத்தி விட்டார். குறிப்பாக என்னை சிறையில் தள்ள வேண்டும் என பரிந்துரைத்தார். என் மீது அவருக்கு என்ன வன்மமோ தெரியவில்லை. இந்த விஷயத்தை பற்றி நேரடியாக டீல் செய்யாமல் அந்த மருத்துவரையும் எனக்கு மருந்துகளை பரிந்துரைத்த மருத்துவரையும் விட்டு விவாதிக்க வைத்தால் பிரச்சனை தீர்ந்து விடும் என நினைக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
