பிரபல நடிகையான மடோனா ஜெபாஸ்டின் கிளாமர் உடையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் மடோனா ஜெபாஸ்டின், இந்த படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார்.
இப்படம் மலையாளம் மட்டும் இல்லாமல் தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி இயக்கத்தில் வெளிவந்த கவண் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் .
பின்னர் காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். தொடர்ந்து தனுஷ் நடிப்பில் பா பாண்டி, ஜூங்கா, வானம் கொட்டட்டும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.
தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் மலையாள சினிமாவிலும் முன்னணி நடிகையாக வர தொடங்கினார். இவர் கடைசியாக தமிழில் லியோ திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார்.
யாரும் எதிர்பார்க்காத வகையில் இவரின் என்ட்ரி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது கையில் ஏகப்பட்ட பட வாய்ப்புகளை வைத்திருக்கும் மடோனா ஜெபாஸ்டின் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றார்.
அந்த வகையில் தற்போது கடற்கரையில் கிளாமரான உடையில் அவர் எடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் இதோ..