Connect with us

சினிமாவில் என்ட்ரி கொடுக்கப் போகும் மகாநதி சீரியல் நடிகை… எந்த திரைப்படத்தில் தெரியுமா..?

CINEMA

சினிமாவில் என்ட்ரி கொடுக்கப் போகும் மகாநதி சீரியல் நடிகை… எந்த திரைப்படத்தில் தெரியுமா..?

மகாநதி சீரியல் நடித்து வரும் நடிகைக்கு படத்தில் ஹீரோயினியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

சின்னத்திரையில் அறிமுகமாகும் பல பிரபலங்கள் பின்னர் வெள்ளித்திரையில் ஹீரோயினியாக கலக்கி வருகிறார்கள். எடுத்துக்காட்டாக பல பிரபலங்களை கூறலாம். கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருந்த நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது சினிமாவில் மிகப்பெரிய நடிகையாக வலம் வருகிறார்.

   

அதைத்தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாயகி சீரியலில் நடித்த நடிகை வாணி போஜன் தற்போது தமிழ் சினிமாவில் கலக்கி வருகின்றார். இப்படி சின்னத்திரையில் இருந்து ஏகப்பட்ட பிரபலங்கள் வெள்ளி திரைக்கு வந்து பிரபல நடிகைகளாக மாறி இருக்கிறார்கள். விஜய் தொலைக்காட்சியில் நிறைய இளம் நடிகர், நடிகைகளுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் மகாநதி. இந்த சீரியல் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றது.

 

இந்த சீரியலை இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கி வருகின்றார் . தந்தையை இழந்த நான்கு சகோதரிகளின் கதையை மையமாக வைத்து இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகின்றது. மற்ற ஜோடிகளை காட்டிலும் காவிரி விஜய் கதாபாத்திரம் தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த விதமாக அமைந்துள்ளது. இந்த தொடரில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் முதலில் நடித்து வந்தவர் பார்த்திபா.

பின்னர் அவர் அந்த சீரியலில் இருந்து விலக அவருக்கு பதிலாக பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பிரபலமான திவ்யா கணேஷ் நடித்து வருகின்றார். இந்நிலையில் சீரியலில் இருந்து வெளியேறிய பார்த்திபாவிற்கு தற்போது மலையாளத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது . கொண்டல் என்ற பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் தான் அவர் கதாநாயகியாக நடிக்கின்றாராம். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top