சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவா தலையா சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இது அந்த சீரியல் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் ஏகப்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் இருக்கின்றது. இதில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களை பார்ப்பதற்கு மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் என்று பல சேனல்களில் காலை முதல் மாலை வரை சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது. சீரியலுக்கு என்று பெயர் போன டிவி சன் டிவி.
தமிழ் நாட்டிலேயே முன்னணி சேனலாக இருந்து வருகின்றது. அதற்கு காரணம் அதில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களும் அதில் கிடைக்கும் டிஆர்பி ரேட்டிங் தான். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி சீரியல் தான் முதல் இடத்தை பிடிக்கும். சன் டிவியும் விஜய் டிவியும் போட்டி போட்டுக்கொண்டு சீரியல்களை இறக்கி வருவார்கள்.
விஜய் டிவியில் எப்படி சிறகடிக்க ஆசை, மகாநதி, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்கள் பிரபலமோ, அதே போல சன் டிவியில் கயல், சிங்க பெண்ணே, வானத்தை போல சீரியல்களும் டாப் 5 டிஆர்பி ரேட்டிங்கில் இருந்து வருகின்றது. இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் விரைவில் முடியை இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
பொதுவாக சீரியலை பொருத்தவரையில் மக்களிடையே சுவாரசியம் குறைந்து விட்டால் அந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வந்து விடுவார்கள். அப்படி மதியம் 12:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பூவா தலையா. இந்த சீரியல் கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் 200 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பாகி இருக்கின்றது.
பெரிய அளவில் இந்த சீரியலுக்கு வரவேற்பு இல்லாத காரணத்தினாலும் சுவாரஸ்யம் இல்லாததால் இந்த சீரியலை முடிப்பதற்கு சன் டிவி முடிவு செய்துள்ளது. பூவா தலையா சீரியல் கிளைமாக்ஸ் காட்சி விரைவில் வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இது அந்த சீரியலை பார்த்து வரும் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்திருக்கின்றது.