தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகச் சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா அவரை விவாகரத்து செய்து பிரிந்த நிலையில் நடிகை சோபிதாவை நாக சைதன்யா இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இதனிடையே ஏற்கனவே திருமணம் ஆன தீ ஃபேமிலி மேன் இயக்குனர் ராஜ் நிடிமோரு என்பவருடன் சமந்தா நெருக்கமாக பழகி வந்த நிலையில் காதல் கிசுகிசுக்கள் இணையத்தில் கசிந்தது.
இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுவரை சமந்தா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் ஈஷா யோகா மையத்தில் இன்று காலை சமந்தாவின் திருமணம் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை சமந்தா ஈஷா யோகா மையத்தில் இருந்த தகவல்களும் கசிந்துள்ளன. இது குறித்து சமந்தா விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சமந்தாவுக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
